மாயா !
கட்டிவைத்து என்னை எங்கே கூட்டிச் செல்கிறாய்
பெட்டியில் வைத்து புதைக்கவா அன்றின்
வெட்டியான் கையினில் வெறுஞ் சாம்பல் ஆக்கவா?
கட்டிளங் காளையாய் இருந்த நற்காலம் போய்
முட்டி மோதி முழங்கால் வரையேனும் புண்ணியம் சேர்த்து,
எட்டிப் பிடித்து இறைநெறி தழுவுகையில்,
வெட்டிவிடுவாயோ வீச்சறுவாள் வெறியோடு?
தட்டான் கையில் தங்கம், கடுந்தீ கண்டதெனின்
வீட்டுவிடுவேனோ வேள்விகண்டு பெற்ற வரம்?
ப. சந்திரசேகரன்
No comments:
Post a Comment