Tuesday, August 2, 2016

மாயா !. 5

மாயா.
வாதம் புரிகையில் வாய் நீளுமோ?
பேதம்  பெரிதாகிக் கை நீளுமோ?
பேதையாய்ப் பெண்மையை பழித்த காலம்போய்,
காதில் விழுஞ்சொற்கள் கதகளி காட்சிகளாய்,
மோதிப் பார்த்திட முனைந்திடும் பெண்மையில்,
வாதியோ வாய்மூடிய கைதியோ  ஆண்மை?
நீதிக்கு நெருடலாய் நிலைகள் மாறிட,
பாதிவழிப் பயணமே மீதிவழி காட்டுமோ?
சீதையின் பாதையில் சீறிடும் பாதங்கள்
சாதிப்ப திங்கே வெற்றியோ தோல்வியோ?
வேதனை வலையில் ஆண்மையோ அல்லது
தீதும் நன்றும் ஈன்றெடுக்கும் பெண்மையோ?
                                                                பசந்திரசேகரன்.     

No comments:

Post a Comment