சொல் தோழா.
மனக்கணக்கும் வாய்ப்பாட்டும் மடை திறந்து,
தினப்பயனாய் திணறலை மழுங்கச் செய்ய .
விரல்கூட்டிக் கணிதத்தில் வித்தைகள் புரிந்தோம்.
குரல்கூவிக் குதூகலமாய், எண்ணும், எண்ணமும்
தரைமுதல் வான்வரை உயரக்கண்டோம்.
புண்ணியக் கணக்கை புன்னகையால் உயர்த்தி
கண்ணியமாய் பாவங்கள் கணிசமாய்க் கழித்தோம்.
பெருக்கிய நன்மைகளை பிறர்க்கும் பகிர்ந்தளித்து
தெருக்கள் தோறும் நண்பர்கள் கூட்டினோம்.
என்கணக்கும் உன்கணக்கும் நம்கணக்கை நிமிர்த்த,
மின்காந்தக் கணக்குகளை மிஞ்சும் மிடுக்கோடு ,
நின்றாலும் நடந்தாலும், நிறைவுகளே நம் நெஞ்சில்!
அன்றாட நினைவுகளில் நின்றாடும் கணக்குகள்,
வென்றாலும் தோற்றாலும் வேதனை நமக்கில்லை.
என்றும் இணைவுகளால், மகிழ்ச்சிக் கூட்டல்களே.
கன்றுகள் மரமாகும் காட்சிகள் காண்போம், வா தோழா !
ப.சந்திரசேகரன் .

No comments:
Post a Comment