Thursday, June 30, 2016

சொல் தோழா!. 5


சொல் தோழா!
உன் பட்ஜெட்டை போடாது, மற்றவர்  பட்ஜெட்டில்
மனம் நோகப் பிரவேசிப்பது முறைதானா?
"உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு" என்ற பழைய
எம்ஜி ஆர் பாடல் வரி மறந்து போனாயா?
எத்தனையோ வழித்தடங்கள்  அமைத்த இறைவன்
உன்னையும் என்னையும் ஒருசேர, ஒருதடத்தில்
பயணிக்க வைக்காதது உன்குற்றமா என்குற்றமா?.
நீ நடக்கும் பாதையில் நான் வராத நிலையிலும்,
ஒப்புமைத் தீயெனும் உன்வழிப் பார்வையில்,
என்பாதை பஞ்சாகி, நான் மட்டும் முள்ளானேன்..
உன்காலில்  என்றேனும் தைத்தேனா சொல் தோழா?
நானென்றும் நினைப்பது உன்னையல்லாது
உன்பட்ஜெட் இல்லையே, உத்தமத் தோழா..
உன்பார்வை உறுத்தலுக்கு முள்நானோ  தோழா?
                                                                    ப. சந்திரசேகரன் .       .
  

No comments:

Post a Comment