சொல் தோழா!
நிலம்,
உன்னையும், என்னையும், ஊரையும்,
ஒருசேரத் தாங்கி நிற்கிறது.
நீயும் நானும் நித்தமும் நிறைத்திடும்
அத்தனை அசுத்தமும் ஊரை ஊனமாக்குகிறது.
ஊர்கனக்க, ஊர்தாங்கும் நிலம் கனத்து,
வனம் கரைய, வனம் வாழ் விலங்குகள் வழியற்று
நம்மூர் வலம் வர,வதைக்கப்பட்டு அழிக்கப்பட,
வாழ்வாதாரம் உனக்கும் எனக்கும் மட்டுந்தானா?
நிலமனைத்தும் உனக்கும் எனக்கும் என்ன
ஒட்டுமொத்த பட்டா போட்டு ஒதுக்கப்பட்டதோ?
நம் கனத்தால் நிலம் நடுங்க,
நிலத்தடி நீர் நலிய, பலமாய் பணம் விதைத்து,
பார்க்கும் பயிர் பழியோ,பாவமோ சொல் தோழா.
ப. சந்திரசேகரன் .
No comments:
Post a Comment