Saturday, June 25, 2016

சொல் தோழா ! 2

சொல் தோழா!
பொருளியலின் வேதம் பொருள் சேர்ப்பதோ?
அன்னிய தேசத்தின் உளவியல் அதனுள் அடங்குமோ?
நீயும் நானும் ஒரே பொருளியலில் ஊறியவர்கள்தானே..
உனக்கும் எனக்கும் தெரிந்த அன்னியச் செலாவணி ,
கருப்பைக் கடத்துவதன்றி வேறுண்டோ சொல்.
நீயும் நானும் கற்ற பொருளியல், களவும் கற்று மறப்பதற்கன்று.
களவியலும் பொருளியளும், நாம் கருவறையிலேயே களவாடியதுதானே!.
தேசம் நாவிலும், தேயம் நெஞ்சிலும், தெரிந்தே தேக்கினோம்.
பேசும் பேச்சினில், பேரம் மட்டுமே, பெரிதெனப் போற்றினோம்.
வாழும் நாளில் வாக்குகள் மாறலாம்; வழித்தடம் மாறலாம்;
நீயும் நானும் நெஞ்சினில் முடக்கிய, நஞ்சது மாறுமோ சொல் தோழா!
                                                                                 ப. சந்திரசேகரன் .      
    .

No comments:

Post a Comment