Tuesday, June 28, 2016

சொல் தோழா! 4

சொல் தோழா!
அரியதோர் செயல்களே ஆலயம் ஆகிடின்
ஆண்டவன் இருப்பிடம் ஆலயம் ஆகுமோ ?
பிரார்த்தனை மட்டுமே ஆன்மீகம் ஆகிடின்
பெரும்பணி பலவும் பொருளற்று போகுமோ ?
நல்லதும் அல்லதும் நாள்பட போரிட
நடித்திடும் நம்மனம் ஆயுதம் ஆகுமோ ?
துப்புரவுத் தகைமையில் தூய்மை பளிச்சிட
தப்புகள் நம்சிந்தை தாண்டுதல் எப்போதோ ?
தரமாய்ச் சிந்தித்து தடம் அமைப்பாய் தோழா.
தனியாய் உனைவிட்டுச் செல்வேனோ தோழா. .  
                                                                        ப. சந்திரசேகரன் .          

No comments:

Post a Comment