சொல் தோழா!
மாநகரில் குற்றங்கள் ஏன் மலிந்து கிடக்கின்றன?
இங்கே போக்குவரத்தில் புதைபவர்களும்,
பொருளைத் தொலைத்து தவிப்பவர்களும்,
உயிர்பறிக்கப்பட்டு குமுறுபவர்களும்,
உன்னையும் என்னையும் உலுக்கும்போதும்,
நீயும் நானும் ஏனென்றும் உறங்கிப்போகிறோம்?
அல்லது உறங்குவதாக நடிக்கிறோம்?
இங்கே சாட்சியாகி சாய்ந்துபோவதைக் காட்டிலும்
கல்லாகி, தூணாகி, காட்சிகளைக் கண்டும் காணாது,
செல்லும் வழியே சரியென்னும் பொல்லாத்தனமே, வெல்லுகிகிறது.
நம் அமைதியில்தான் எத்தனை சடலங்களின் சலசலப்பு!
மனமே மயானம் ; வார்த்தைகள் சாட்சியாகி சரிவதைவிட,
நம் அமைதியே மாண்ட உயிர்கட்கு இரங்கட்பா.
உறக்கத் தொடர்கதைக்கு உயிர்கொடுப்போம்
வா தோழா! .
ப. சந்திரசேகரன் .

No comments:
Post a Comment