Saturday, September 23, 2023

விழிகள்

கண்ணீர்த் துளிகளின் வாகனம்

காதல் களிப்பின் மோகனம்.

பரிவுப் பாதையின் வெளிச்சம்.

புரிதல் பூக்களில்,அனிச்சம்.


இதயம் திருடிடும் கன்னக்கோல்.

பதிக்கும் பரிந்துரை,எழுதுகோல்.

மெச்சும் மென்மையின் ஆதாரம்.

அச்சம் அரித்திட சேதாரம்.


கடிந்திடும் வேளையில் கடிவாளம்.

படிந்திடும் பொழுதினில் வேதாளம்.

விரிந்திட வீற்றிடும் நெடுவானம்;

சுருங்கிச் சரிகையில் தொடுவானம்.


மூடித் திறக்கையில் முழுநிலவு.

மாடத்து விளக்கின் ஒளிக்குலவு.

கேடொன் றில்லா விழிகளிலே,

ஏடுகள் பலவாம் இயம்பிடவே.

ப.சந்திரசேகரன்.




1 comment:

  1. கேடொன் றில்லா , விழிகளே எடுத்தியம்பும் ஒருவர்💜இதயத்தை,,

    ReplyDelete