(இது ஒரு திரைப்பட தலைப்பு மாலை)
அன்பே வா!
உத்தரவின்றி உள்ளே வா!
நீவருவாய் என
நினைத்தேன்,வந்தாய்.
என்னருகே நீயிருந்தால்,
எங்கேயும் எப்போதும்,
பூவெல்லாம் உன்வாசம்.
மனசுக்குள் மத்தாப்பு.
நெஞ்சத்தைக் கிள்ளாதே;
உள்ளத்தை அள்ளித்தா.
நெஞ்சிருக்கும்வரை,
நெஞ்சமெல்லாம் நீயே,
நெஞ்சில் ஒரு ராகம்.
நினைவிருக்கும்வரை,
நீதான் என் பொன் வசந்தம்,
நெஞ்சில் ஓர் ஆலயம்!.
உனக்கும் எனக்கும்,
வானமே எல்லை.
நீயும் நானும்
வானத்தைப்போல!.
நித்தம் ஒரு வானம்.
நான்
வானவில்.
நீ
வானம்பாடி.
நான்
நீலவானம்.
நீ,
செக்கச்சிவந்த வானம்.
நான்
புதியவானம்.
நீ
ஆள்ளித்தந்தவானம்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
ஒரே வானம் ஒரேபூமி.
நீயும் நானும்
துள்ளித் திறந்த காலம்,
சொல்லாமலே,
சொல்ல மறந்த கதை!
சொல்லத்துடிக்குது மனசு.
அன்பே ஆருயிரே,
விண்ணைத் தாண்டி வருவாயா?
உனக்காக நான்,
காலமெல்லாம் காத்திருப்பேன்.
மற்றவை நேரில்.
விடியும்வரை காத்திரு.
விடிஞ்சா கல்யாணம்.
வானம் கொட்டட்டும்.
ப.சந்திரசேகரன்.
Ch Ch b.
நல்ல வேளை இது ஒரு திரைப்பட தலைப்பு மாலை என்ற உரிய தலைப்பு செய்தி மட்டும் இல்லாதிருந்தால் தலைப்புகளே உரையாடல்களாய்.. கண்ணாமூச்சி காட்டி இருக்கும்.
ReplyDelete