Monday, September 4, 2023

வகுப்பறை வெளிச்சம்.

இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!.


விருதுக்குக் காத்திரா

விளக்குகள் பலவுண்டு.

அவர்களே உலகெங்கும்

வகுப்பறையின் வெளிச்சம்.

அறிவின் அகல்விளக்கு.

வகுப்பு வாதத்தின் 

சிகப்பு விளக்கு.

மதவாத நஞ்சின்

மாற்று மருந்து!.

இளந்தளிர்களின் ஊட்டச்சத்து.

சாதியத்தை புறந்தள்ளும்

வேதிய வழிகாட்டி.

விழியும் மொழியும்

விரிசல்கள் தவிர்த்து,

மொழியெனும் ஊற்றில்

தெளிவுறும்சிந்தனையால்

'உள்ளத்தில் நல்ல உள்ளம்'

உருவாக்கும் உயிர்த்துளி.


கல்வியின் கரம்பற்றி

தலைமுறைகள் தழைத்தோங்க,

நடை வண்டியாய்,

நாள் காட்டியாய்,

கேள்வியின் விடையாய்,

தோளில் தொங்கிடும்

புத்தகப் பைகளாய்,

அன்பையும் அறிவையும்

இருகரமாய் இணைத்து,

அறிவியலும் வரலாறும்

புவியியலும் மொழியுடனே,

புகலிடங்கள் பலகாட்டும்

பரிவுக் களஞ்சியமே,

புடம்போட்ட நல்லாசான்!.

தரவுகள் ஆசிரியருக்கு 

திரண்டிடும் தெரிந்தோரே.

வரவுகள் ஆசிரியருக்கு

வாழ்ந்திடும் விளைச்சல்களே!

ப.சந்திரசேகரன்.




2 comments:

  1. விருதுக்குக் காத்திரா
    விளக்குகள் ஒவ்வொரு வகுப்பறையிலும் , ஒவ்வொரு நாளும் ஏற்றிய வெளிச்சமே விண் மீன்களாய் இலட்சக் கணக்கில் விண்ணில்..
    ✨✨💫✨💫🌠

    ReplyDelete