Monday, March 7, 2022

பிறப்பின் பிறைநிலவு { இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்}

கண்மை என்பது கருவிழிக் கழகு; 

பெண்மைக்கு அழகு  பெண்ணின் சிறகு. 

பிறப்பின் பிறைதனை தொழுதிடப் பழகு .

பறப்பதைப் பார்த்து ரசித்திடு பிறகு. 

பெண்ணைப் பலவழி,போற்றுது  அரசு ;

விண்ணை நோக்கி கொட்டிடு முரசு. 

ஆட்சியில் வலம்வரும் மகளிரைக் கண்டு, 

மாட்சிக்கு அளிப்போம் பன்மலர்ச் செண்டு. 

மலரின் மணமே மனமகிழ் தினமாம்;

உலராத்  திடமே  பெண்ணின் மனமாம் .

உலகப் பெண்மை ஊட்டிடும் உண்மை,

பலகைப் பிடியுடன் பரப்பிடு மேன்மை.   

அகலாப் பலமே அன்னையின் அருளாம்;  

மகளிர் தினத்தின் மறுத்திடாப் பொருளாம்.

             வாழ்க மகளிர்,வளர்ந்திடும் வீச்சில்!  

ப.சந்திரசேகரன்.    

No comments:

Post a Comment