Saturday, August 3, 2019

ஆடிப்பெருக்கு

ஆற்றில் நீர்பெருக, ஆடியே பெருகியது;
நேற்றய கதையெல்லாம் பூவிழந்த நாராகி,
காற்றில் பூமணமும் கரைக்கடந்து கடலேறியது.
சேற்றில் கால்வைத்து சோற்றைக் கண்டதுபோய்,
ஊற்றும் உறைந்துவிட,ஊரில் எதுப்பெருகும்?
நூற்றுக்கு நூறிங்கே நெஞ்சுரமே வேளாண்மை.
நாற்றுக்கு நிலமிங்கே நாற்புறமும் கடன்பெற்று,
தோற்றபயிர் தொடர்கதையாய்  துரத்தி விரட்டிடவே,
மாற்றுப் பாதையின்றி தரிசொன்றே தடமாகும்!
தேற்றாக் கதையாய் தொடரும் தற்கொலைகள்;
தூற்றுதல் முறையாமோ துவண்டு விழுந்தோரை?
ஏற்றம் ஏர்முனைக்கு ரியும் குளங்களுமே.
கூற்றில் உண்மையுடன் குணங்கள் பெருகிடவே,
போற்றும் காவிரியை பொதுவுடைமை நதியாக்கி,
வேற்றுமை மூழ்கிடவே,விளைநிலங்கள் பெருகிடுமாம்.
மாற்றத்தில் மலைபோல் அலைகளெழும்  ஆடிப்பெருக்கு. 
                                                                             ப.சந்திரசேகரன். 

No comments:

Post a Comment