Friday, April 26, 2019

"நான்" எனும் சொல்

சொன்னதை,
சொன்னேன் என்று
சொல்வதற்கு "நான்".
சொல்லாததை,
சொல்லவில்லை என்று
சொல்வதற்கு "நான்".
அகந்தையின் அரியணை
"நான்".
தான் எனும் மரியாதை
"நான்".
ஆளுமையில் இல்லை
"நான்".
அதிகாரத்திற் கில்லை 
"நான்" 
"நாம்" எனும் அமைப்பில்,
என்றும் இல்லை "நான்".
தாள் பணியும் வேளையில்
"நான்" அழிந்து போய்விடின்,
வான் புகழும் வண்ணம்,
மணம் கமழும் மலராம்,
"நான்" எனும் நிலைகடந்த,
"நான்" எனும் சொல்!
ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment