பிள்ளையார் சுழியை பலர்போட,
பலர் சுழியை அவர் போடுவார் .
கடவுள் வாழ்த்து பலர் பாட,
பலர் பாட்டு கடவுளை நிப்பாட்டும்.
செய்யும் தொழிலை சூது கவ்வும் ;
செய்யாத் தொழிலை,சில்லறை மொய்க்கும் .
எண்ணும் எழுத்தும் கண்ணா காமல்,
கண்ணில் எண்ணே,முன்னில் நிற்கும்.
என்னால் முடியும் என்பதைக் காட்டிலும்,
எண்ணால் முடிவதே எங்கும் எதிலும்.
பற்றற்ற பாதை பழைய பாதை;
குற்றப் பாதையில் கூட்டத்தைப்பார் !.
செல்வத்துள் செல்வம்,கொள்ளை அடித்ததே;
சொல்லி யடித்து,கோட்டையை வெல்லும்.
கொடும் பாவிகள் தினம் குவிந்திட,
கொடும்பாவிகள் மனம் குமுறி எரிப்பர்.
குறைவற்ற செல்வம் கொடிய நோயெனில்,
நோயற்ற வாழ்விற்கு இங்கென்ன வேலை?
கூடிடும் செல்வம் கூடிடக் கண்டு,
கூடிடு மாமோ மருத்துவ மனைகள்?
அண்ணனும் தம்பியும் அடியுதை மிஞ்சிட,
திண்ணையைப் பற்றிட நிற்பராம் தம்பிகள் !
உண்டி கொடுக்காது உயிர்கள் மாய்ந்திட,
மண்டி யிடுவோர் ,மாறுகால் வாங்குவர் .
தேளிருக்கும் வீட்டில் திருடப் போனால்
தேள் கொட்டாமல் தேன் கொட்டுமோ?
மக்களைக் கொண்டே மகுடங்கள் உண்டு;
சிக்கல் நிகழ்ந்திடின்,மாற்றுக துண்டு.
கற்றது கடலென கருதுவோர் பலரும்,
முற்றிலும் முழமிட வெறுங்கை விரலே!
காற்றுள்ள போதே தூற்றுவோர் தம்மின்
தூற்றிடும் சொற்களால் காற்றே கனக்கும்.
கோயிலில் குற்றம் கோணியி லேற
தாய்க்கொரு கோயில் தரை யிறங்குமோ ?
மந்திரத்தில் மனம் ஒவ்வா திருக்க
தந்தைசொல் என்றும் மந்திர மாகுமோ ?
கூடிக் கொழுத்திட கோடியால் நன்மை;
கோடிகள் பெருத்திட குறுகிடும் உண்மை.
பழையன கழிதலும் புதியன புகுதலும்,
வழியினை மாற்றும் வாடிக்கைப் பயணமே !
ப.சந்திரசேகரன் .
பலர் சுழியை அவர் போடுவார் .
கடவுள் வாழ்த்து பலர் பாட,
பலர் பாட்டு கடவுளை நிப்பாட்டும்.
செய்யும் தொழிலை சூது கவ்வும் ;
செய்யாத் தொழிலை,சில்லறை மொய்க்கும் .
எண்ணும் எழுத்தும் கண்ணா காமல்,
கண்ணில் எண்ணே,முன்னில் நிற்கும்.
என்னால் முடியும் என்பதைக் காட்டிலும்,
எண்ணால் முடிவதே எங்கும் எதிலும்.
பற்றற்ற பாதை பழைய பாதை;
குற்றப் பாதையில் கூட்டத்தைப்பார் !.
செல்வத்துள் செல்வம்,கொள்ளை அடித்ததே;
சொல்லி யடித்து,கோட்டையை வெல்லும்.
கொடும் பாவிகள் தினம் குவிந்திட,
கொடும்பாவிகள் மனம் குமுறி எரிப்பர்.
குறைவற்ற செல்வம் கொடிய நோயெனில்,
நோயற்ற வாழ்விற்கு இங்கென்ன வேலை?
கூடிடும் செல்வம் கூடிடக் கண்டு,
கூடிடு மாமோ மருத்துவ மனைகள்?
அண்ணனும் தம்பியும் அடியுதை மிஞ்சிட,
திண்ணையைப் பற்றிட நிற்பராம் தம்பிகள் !
உண்டி கொடுக்காது உயிர்கள் மாய்ந்திட,
மண்டி யிடுவோர் ,மாறுகால் வாங்குவர் .
தேளிருக்கும் வீட்டில் திருடப் போனால்
தேள் கொட்டாமல் தேன் கொட்டுமோ?
மக்களைக் கொண்டே மகுடங்கள் உண்டு;
சிக்கல் நிகழ்ந்திடின்,மாற்றுக துண்டு.
கற்றது கடலென கருதுவோர் பலரும்,
முற்றிலும் முழமிட வெறுங்கை விரலே!
காற்றுள்ள போதே தூற்றுவோர் தம்மின்
தூற்றிடும் சொற்களால் காற்றே கனக்கும்.
கோயிலில் குற்றம் கோணியி லேற
தாய்க்கொரு கோயில் தரை யிறங்குமோ ?
மந்திரத்தில் மனம் ஒவ்வா திருக்க
தந்தைசொல் என்றும் மந்திர மாகுமோ ?
கூடிக் கொழுத்திட கோடியால் நன்மை;
கோடிகள் பெருத்திட குறுகிடும் உண்மை.
பழையன கழிதலும் புதியன புகுதலும்,
வழியினை மாற்றும் வாடிக்கைப் பயணமே !
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment