Tuesday, April 30, 2019

ஈடிலா மேதினம்

உடலின் உழைப்பு மனமே அறியும்;
கடலின் அலைகளை அறியும் கரையென!
படைகள் பலவென ஊர்ந்திடும் எறும்பினை
இடங்கண் டறியுமோ யானையின் விழிகள்?
அடங்கிடும் எளியோர் அவர்தம் உழைப்பு,
உடனிருந் தறிவரோ உலகாள் பவர்கள்?

இடைவிடா உழைப்பின் இயக்கம் பற்றிடின்,
படிகள் பலவும் கடந்தவர் பலரின்,
தடைகள் தகர்த்த கதையது விளங்கும்.
படித்தவன் உழைப்பும் பாமரன் உழைப்பும்,
உடையாய்,உணவாய்,உறங்காக் கனவாய்
எடைகள் கூட்டுமாம் எங்கும் எதிலும்!

விடைகள் காண்பது வினாக்கள் மட்டுமோ?
விடா முயற்சியும் விடைகள் வழங்கி, 
கெடா உழைப்பென காட்டுமாம் இலக்கு. 
கொடிகள் இங்கே ஆயிரம் உண்டு;
கூடிடும்  கரங்களின் உழைப்பின் கொடியே,
ஈடிலா மேதின ஈர்ப்புக் கொடியாம்! 
ப.சந்திரசேகரன் .  

Friday, April 26, 2019

"நான்" எனும் சொல்

சொன்னதை,
சொன்னேன் என்று
சொல்வதற்கு "நான்".
சொல்லாததை,
சொல்லவில்லை என்று
சொல்வதற்கு "நான்".
அகந்தையின் அரியணை
"நான்".
தான் எனும் மரியாதை
"நான்".
ஆளுமையில் இல்லை
"நான்".
அதிகாரத்திற் கில்லை 
"நான்" 
"நாம்" எனும் அமைப்பில்,
என்றும் இல்லை "நான்".
தாள் பணியும் வேளையில்
"நான்" அழிந்து போய்விடின்,
வான் புகழும் வண்ணம்,
மணம் கமழும் மலராம்,
"நான்" எனும் நிலைகடந்த,
"நான்" எனும் சொல்!
ப.சந்திரசேகரன் .  

Monday, April 22, 2019

Easter 2019.

Jesus,I am sure,has shied away this Easter.
Because sins have grown here,much faster.
Mass killings surpass the scourge of crucifixion.
Madness without any method,carries no diction.

Even vengeful Hamlet spared his uncle at prayer.
But beastly bombers toll death knells,tier on tier.
The Lord never thought the cross was a load on his back;
For he knew that his betrayers their redemption did lack.

The black sheep are more,that frown upon others'faith,
Fomenting passions of fury to the size of giant Goliath.
It looks as though Good Friday succeeds resurrection,
When terror revives speedier than love's resuscitation.

A lot many crosses swell here,to be borne by mankind,
As memories of mammoth wounds,staying intertwined.
P. Chandrasekaran

Saturday, April 20, 2019

முற்றுப்புள்ளிகள்!

அன்பிற்கு ஆதிக்கமே முற்றுப்புள்ளி; 
ஆற்றலுக்கு ஆணவமே முற்றுப்புள்ளி. 
இறைநெறிக்கு மதவெறியே முற்றுப்புள்ளி. 
ஈகைக்கு சுயநலமே முற்றுப்புள்ளி; 
உண்மைக்கு ஊகமே முற்றுப்புள்ளி. 
ஊட்டத்திற்கு வாட்டமே முற்றுப்புள்ளி;    
எழிலுக்கு அலங்கோலம்  முற்றுப்புள்ளி. 
ஏற்றத்திற்கு ஏளனமே முற்றுப்புள்ளி. 
ஐந்தறிவிற்கு ஐயமே முற்றுப்புள்ளி;
ஒப்புரவிற்கு ஒழுங்கீனமே முற்றுப்புள்ளி. 
ஓய்விற்கு ஓசையே முற்றுப்புள்ளி; 
ஒளஷதத்திற்கு ஆழ்நஞ்சே முற்றுப்புள்ளி .
ப.சந்திரசேகரன் .        

Monday, April 15, 2019

At the hustings

Flags and symbols facilitate parties.
Fake faces felicitate one another.
Alliance of opportunistic love,
And opposition of open hate,
Keep shuffling as trump cards.
Pawns are the people,who fall
Under their failure to perceive
Their preferences in their foresight
But harrow in their hindsight.

Flow of cash is their one time hope
Which they reap to its fullest finish.
Sounds steeply surpass speeches 
Showing hollowness of the brains,
Bound to the concept of currency
As money,but not as usage of words.
Amidst a long line of leaders,
There are empty lines of followers.
Who is to follow and who is worthy
Of following with the dignity of membership?

The ballot is a beaming piece of hope
Bailing bogged down batteries out of
Nagging political and social worries.
Each ballot at the hustings envisages
A trial and error trip to democracy.
Missing elections by a rejection process
As absence from voting,or N O T A, sidesteps 
Electoral obligations entrenched to one's soil
And makes adult franchise an awkward app.

Each exercise in voting is an endeavour
For laying the road map for redemption
Of justice and progress,from wrong choices
To represent every voter as their true voices
P. Chandrasekaran.








Saturday, April 13, 2019

வாசலில் வெளிச்சம்


   {இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்}. 

மாதங்களில் முதலாகி மகிழ்ச்சியை மழையாக்கி
மாசறு சிந்தனையின் மாட்சிமை பெருக்கிடவே,
சோதனையின் வெப்பத்தில் சுருங்கிடா செயல்பெருக்க,
வாசலில் வெளிச்சமென வந்திடுமாம் சித்திரை!

காத்திருந்த நன்மைகள் காலத்தில் கனிந்துவர 
நேசத்துடன் நெஞ்சிணைய நெருங்கிவரும் சித்திரை; 
பூத்ததோர் மலரெல்லாம் பூரிப்பைத் றுவதுபோல் 
பேசுவதும் பழகுவதும் பெரிதுவக்கும் சித்திரை! 

சாத்திரத்தின் சாகசமும் நாத்திகத்தின் நூதனமும் 
ராசியென ஆற்றலென ஊற்றெடுக்கும் சித்திரை; 
ஆத்திரமும் வசைமொழியும் தேர்தலென்று திரண்டுவர, 
தேசமெலாம் மறுமலர்ச்சி காணவைக்கும் சித்திரை!

ராத்திரியும் பகல்பொழுதும் ராகங்களில் சங்கமித்து  
வாசமுடன் வளங்கொழித்து,வாழ்வளிக்கும் சித்திரை.
வேதனையின் வீச்சினிலும்  வேட்கையுடன் வாழ்ந்திடவே,
ஆசிகள் அணிவகுக்க அரவணைக்கும் சித்திரை! 
ப.சந்திரசேகரன் .   

Sunday, April 7, 2019

புதிய பார்வை

பிள்ளையார் சுழியை  பலர்போட,
பலர் சுழியை அவர் போடுவார் 
கடவுள் வாழ்த்து  பலர் பாட,
பலர் பாட்டு கடவுளை நிப்பாட்டும்.

செய்யும் தொழிலை சூது கவ்வும் ;

செய்யாத் தொழிலை,சில்லறை மொய்க்கும் .
எண்ணும் எழுத்தும் கண்ணா காமல்,
கண்ணில் எண்ணே,முன்னில் நிற்கும். 

என்னால் முடியும் என்பதைக் காட்டிலும், 

எண்ணால் முடிவதே எங்கும் எதிலும்.
பற்றற்ற பாதை பழைய பாதை; 
குற்றப் பாதையில்  கூட்டத்தைப்பார் !. 

செல்வத்துள் செல்வம்,கொள்ளை 
டித்தே;
சொல்லி யடித்து,கோட்டையை வெல்லும். 
கொடும் பாவிகள் தினம்  குவிந்திட, 
கொடும்பாவிகள்  னம் குமுறி எரிப்பர். 

குறைவற்ற செல்வம் கொடிய நோயெனில், 

நோயற்ற வாழ்விற்கு இங்கென்ன வேலை? 
கூடிடும் செல்வம் கூடிடக் கண்டு, 
கூடிடு மாமோ மருத்துவ மனைகள்? 

அண்ணனும்  தம்பியும் அடியுதை மிஞ்சிட, 
திண்ணையைப் பற்றிட நிற்பராம் தம்பிகள் !
உண்டி கொடுக்காது உயிர்கள் மாய்ந்திட,
மண்டி யிடுவோர் ,மாறுகால் வாங்குர் . 

தேளிருக்கும் வீட்டில் திருடப் போனால் 

தேள் கொட்டாமல் தேன் கொட்டுமோ?
மக்களைக் கொண்டே மகுடங்கள் உண்டு;  
சிக்கல் நிகழ்ந்திடின்,மாற்றுக துண்டு. 

கற்றது கடலென கருதுவோர் பலரும், 

முற்றிலும் முழமிட வெறுங்கை விரலே! 
காற்றுள்ள போதே தூற்றுவோர் தம்மின் 
தூற்றிடும் சொற்களால் காற்றே கனக்கும். 

கோயிலில்  குற்றம் கோணியி லேற 

தாய்க்கொரு கோயில்  தரை யிறங்குமோ ?
மந்திரத்தில் மனம் ஒவ்வா திருக்க 
தந்தைசொல் என்றும் மந்திர மாகுமோ ? 

கூடிக் கொழு
த்திட கோடியால் நன்மை;
கோடிகள் பெருத்திட குறுகிடும் உண்மை. 
பழையன கழிதலும் புதியன புகுதலும், 
வழியினை மாற்றும் வாடிக்கைப் பயணமே   ! 
                                      ப.சந்திரசேகரன் .      

Thursday, April 4, 2019

The Slimy Toad

If we sing soothing lullabies to others'pains
Our songs pass through the divine terrains.
Life's purpose is not to hurt others,for gains,
Nor harness the soul,harbouring deep stains.

The body manufactured with an expiry date,

Grows more and more,to physically inflate
Its occupying space,at an encroaching rate;
The womb rues its product's parasitic spate.

But the body is just a weird vehicle on road.

Driven by the dirty desires of the slimy toad
To tally speed with its gallant greed to hoard
All that it comes upon,but cannot justly hold.

Each body sees the other as stumbling block,

While the toad like brain jumps over,as jock,
Belittling the design of the space,drawn for all,
With a bullying tactics of making others small.

The world is not a maneuvering stage to perform

Acts to bulldoze the weak,like a boisterous storm.
There is enough space for all to spread their wings;
It is the trick of the dirty toad,that twists the slings.

P.Chandrasekaran.