வேதம் பயின்றோர்க்கு வாக்கினில் நாதம்;
நாதம் செறிந்தோற்கு நாவினில் கீதம்.
முதுமறை வேதமும்,மூச்சாளும் கீதமும்,
அதிர்வுகள் கண்டிடின்,ஆன்மா வென்றிடும்.
வேதத்தின் பயணம் வேறுவழி யாகி,
வேதாளப் பிடியின் வலையில் விழுந்து,
பூதத்தின் புரதம் புலால் பெருக்கிட ,
பாதாள நீர்க்கூட பரிசுத்தம் பிரியும்.
நூதனப் பூதங்கள்,நூல்கோர்த்த மலர்களை,
மோதலில் முரசுகொட்டி முழம்போட்டு மிதித்திட,
சேதமுற்ற வேதமும்,செவிதுறந்த கீதமும்,
பேதத்தை பெரிதாக்கிப் பிரிவினைக் கூட்டும்!
வாதம் புரிவதற்கே வால்முளைத்த வேதம்,
சாதி சடங்கென்று சாத்திரங்கள் பேசும்.
நீதிக்குள் அடங்காத சாதிச்சண்டை சேற்றில் வாதத்தின் வலிமையினால்,வலிகளே மிஞ்சும்!.
வேதவழி என்பதை வேள்விவழி யாக்கி
காதில்விழும் மந்திரங்கள் எல்லைக்கற்க ளாகி,
நாதியற்ற நல்லோரின் நலம்காக்கும் தூணென, சூதுமரம் சாய்த்திட,நாதன்வரும் நேரமெது?
ப.சந்திரசேகரன் .

No comments:
Post a Comment