Tuesday, March 19, 2019

எழுந்திட விழு!

பள்ளத்தில் விழுந்திட பஞ்சாங்கம் பார்ப்பரோ?
பாதத்தில் விழுந்திட பயிற்சிகள் பெருவரோ?
காதலில் விழுந்திட காவிகள் உடுப்பரோ?
நாதத்தில் விழுந்திட நாட்டியம் பயில்வரோ?

பூரண கும்பம் முன்னால் விழுந்து
சரணம் சிந்தையில் சாட்சியாய் நிறுத்தி, 
காரணம் மறந்து கனிந்துத்  தொழுதிட,
ஊருணி போல்மனம் உவகை பெருமாம்.

விழுதல் அனைத்துமே விபத்துகள் அல்ல;
பழுதிலா விழுதலே பரவசம் கூட்டும்.
எழுதிய புண்ணியம் இசைந்திட வாழ்ந்திடின்,
விழுந்திடும் வேளையில் விழுமிடம் காக்கும்.

தாய்மையின் பாதம் தரணியே தொழுமெனில்,
வாய்மையில் விழுதலே வாழ்வில் எழுச்சியாம்! 
பணிவுடன் விழுந்து பக்குவம் போற்றிடின்,
துணிவுடன் எழுதலே தூக்கிடும் ஏணியாம்! 
ப.சந்திரசேகரன் .   

Tuesday, March 12, 2019

The Recluse

Away from the artful dodgers and dons,
The peace of being perched piously,alone,
Severs the soul,from one's flesh and bone;
Serene notes of the mind,stream a trance.

When pleasures and pains put up a show,
Solitude serves them both a deadly blow;
Beating the boulevard of joy and sorrow,
The soul shrugs off,thoughts of tomorrow.

As the crowd around,is a bundle of baloney,
A secluded march straight towards the void,
Greets a battalion of bliss placidly deployed
To clear the crazy crowd with a silence stony.

Redemption is the exit for the sinning crowd;
Radiance reflects,the hermit's heritage aloud.
P. Chandrasekaran.

Sunday, March 10, 2019

குத்துமதிப்பா ! !


             {ச்சும்மா மனச லேசாக்க}

கட்ட பிரம்மச்சாரின்னா கட்டையா இருப்பாரோ 
ப்ப ஒசரமான பிரம்மச்சாரிக்கு எதிர்ப்பதமோ? 
எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னாள் அம்மா.
நான் என்னை,தேய்த்துக்குளித்தேன்.
"இரு! நாளைக்கு  வச்சிருக்கேன் உனக்கு கச்சேரி "
என்றான் நண்பன்
"எந்த மேடையில்?"என்றேன் நான்?
சொன்னதும் நண்பனின் முகத்தில் 
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும், 
அதனால் முகத்தில் பாதிப்பேதுமில்லை.
கச்சேரின்னு  சொன்னதுந்தான் நினைவுக்கு வருது. 
"நேத்து கச்சேரியில பாடுவர் 
சும்மா பின்னி எடுத்துட்டார்னார் ஒருத்தர்" 
பாடகர் எதை பின்னுனாரோ,எதை எடுத்தாரோ, 
எனக்கு ஒன்னும் தெரியல.

"அவனை உண்டு இல்லைன்னு பண்ணப்போறேன்"
 என்றார் எதிர்வீட்டு ஏகாம்பரம்.
"உண்டா? இல்லையா? 
ஒரே நேரத்தில் எப்படி அது முடியும்?"
என்பதே என் கவலை.
அம்பாளைப் பார்த்து, 
"மூச்சுக்கு முன்னூறுதரம்
உன்பேரதானம்மா உச்சரிக்கிறேன்"
என்றார்  அப்பா.
"ஒருமூச்சுக்கா?,
நம்பமுடியலையேப்பா"
என்று முணுமுணுத்தேன் நான்.

"பத்து பாத்திரம் தேச்சாவது
வயித்த கழுவிக்குவேன்"
என்றார் பக்கத்து வீட்டு பாட்டி.
"மிச்ச பாத்திரத்தை யார் தேய்ப்பா பாட்டி?
நீங்க வயித்த மட்டுந்தான் கழுவுவீங்களா
மேலுக்குக்கூட குளிக்கமாட்டீங்களான்னு" கேட்டப்போ 
பாட்டி "செருப்பு பிஞ்சுடும்"னா
"ஐயோ என்ன பாட்டி,இப்பதானே
உங்க புள்ள வாங்கி கொடுத்தான்னு" சொன்னேன்.
பாட்டியின் கண்ணில் அனல் பறந்தது.
"ஆமாம் அது எப்படி அனல் பறக்கும்?
அதுவும் கண்ணில்?
ஹூம்! என்னத்ததான் பேசறதோ
என்னதான் புரிஞ்சுக்கறதோ! 
ஏதோ குத்துமதிப்பா புரிஞ்சுக்கவேண்டியதுதான். 
ஆனா ஒரு குத்துக்கு எவ்வளவு மதிப்புன்னு, 
பார்த்திபனையும் வடிவேலுவையுந்தான் கேக்கனும்'' 
ப.சந்திரசேகரன் .      

Friday, March 8, 2019

Women,the Doers. {HAPPY WOMEN'S DAY}

Doers,as much as, 
They think and talk.
Daily targets but.
Broad and bound in a nutshell.
Broad in forgiving, 
Though bound to misgivings.
They know to love as the mother earth,
Because they have the latent kick for love.
But they rise as tremors,quakes and volcanoes
When matters mount as injustice waves.
They can make a home or mar it.
However,they infuse more than they impair.
Hardly after blood,they are the containers
Of life's blood,to generate genders both,
Despite braving gender blows,day in and day out.
"All the faces are my faces and all my faces
Are my true faces"said Lord Krishna.
So are women,the makers and doers
Of the life of theirs,yours and mine.
With their man made masks,fragile and frail,
Their presence here,is not to whimper and wail;
Behind our success story,is their trendy,tonic trail,
As the designers and doers of our progress to prevail. 
P. Chandrasekaran.

Thursday, March 7, 2019

இன்றைய கீதை

1}எது நடக்கவில்லையோ அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை.
2}நீ என்ன  விட்டுத் தந்தாய்,இங்கே விட்டுச் செல்ல. 
3}எது திருடப்பட்டதோ,அது உன்னிடமிருந்தே    திருடப்பட்டது.
4} நான் மைய்யத்திலும் இருப்பேன்;வையம் முழுமையும் சுற்றுவேன்;என்னைச் சுற்றுதெல்லாம் என்கை அசைவே.
5}கடமையைச் செய்யாதே;காலம் முழுக்க பலன் அடைவாய்.
6}வெறுங் கையோடு வந்தாய்;நீ அள்ளிய குருணைக்கு அளவே இல்லை.
7}உன் ஆன்மா அழிவதில்லை;ஏனெனில் உனக்கு ஆன்மாவே இல்லை. 
8}இன்று உன்னுடையதாக இருப்பது நேற்று பிறருடையது;அது இன்னும் பலரது  உடமையைச் சேர்த்து,நாளை உன்னுடையதாகும். 
9}நரகத்தின் வாயில்கள் மூன்று:- அவை முறையே,காமம்,குரோதம்,பேராசை;இவை மூன்றும் உனது வாயில்களே! 
10}மாற்றமே அகிலத்தின் விதி;பரம ஏழையாகிய நீ பத்து எண்ணுவதற்குள் கோடீஸ்வரன். 
 ப.சந்திரசேகரன் .      

Friday, March 1, 2019

நான் ஒன்றும் புத்தன் அல்ல.

போர் வேண்டாம் எனச் சொல்ல, 
நான் ஒன்றும் புத்தன் அல்ல; 
குடியைக் கோடிட்டு 
குறிவைத்துத் தகர்ப்பவர்கள் 
குருதியைக் குறிவைத்து 
குணமின்றி குடிப்பவர்கள்,
தீவிரமாய்த் தாக்கியதால் 
திக்கற்றுப் போனதிங்கே, 
தேய்பிறையாக்  குடும்பங்கள்! 
தீவிரத் தாக்குதலை,  
திமிறித் தணல் கொட்ட 
தேடிப்போவதெங்கே? 
தேடிப்போகுமிடம் 
தேடும் இடம்தானோ? 
தேடித் தகர்த்தாலும் 
குறிவைத்துத் தகர்த்தேனோ 
வைத்தது குறிதானோ? 
பாடும் கவிதைக்குள் 
பகலெல்லாம் இரவாகின், 
இரவின் இருளில் 
எதைத்தான் தேடுவதோ? 
போர் என்னும் பூதத்தின் 
வேர் என்றும் விடுகதையே! 
மூவேந்தர் காலமுதல் 
முடிசூடா மன்னர்தம் 
மாவீரக் காலம்வரை,
மாயுத்தம் மனநோயே. 
காவல் விதிகளுக்குள், 
போரெனும் கார்மேகம்,
மூள்வதன் முன்னோட்டம் 
காண்பது கானல்நீரே;  
போரென்றும் பொதிச்சுமையாய் 
மார்பினில் வலித்திடும்  
பாவத்தின் பழிச்சுமையே! 
காரணங்கள் பலகூறி 
காயங்கள் ஏற்படுத்தும் 
போர்களின் புதுச்சசாயம், 
ஆள்பவரின் ஆழ்மனதின் 
ஆங்காரக் கறையே. 
பாரினில் மக்களென்றும் 
பரவலாய்ப் போற்றுவது 
ஊர்க்கூடி வலம்வரும் 
அமைதியெனும் தேரே!
ப.சந்திரசேகரன் .      

நாதனின்றி வேதமில்லை

வேதம் பயின்றோர்க்கு வாக்கினில் நாதம்;
நாதம் செறிந்தோற்கு  நாவினில் கீதம்.  
முதுமறை  வேதமும்,மூச்சாளும் கீதமும்
அதிர்வுகள் கண்டிடின்,ஆன்மா வென்றிடும். 

வேதத்தின் பயணம் வேறுவழி யாகி, 
வேதாளப் பிடியின் வலையில் விழுந்து
பூதத்தின்  புரதம் புலால் பெருக்கிட 
பாதாள நீர்க்கூட பரிசுத்தம் பிரியும். 

நூதனப் பூதங்கள்,நூல்கோர்த்த மலர்களை,
மோதலில் முரசுகொட்டி  முழம்போட்டு மிதித்திட,
சேதமுற்ற வேதமும்,செவிதுறந்த கீதமும்,
பேதத்தை பெரிதாக்கிப் பிரிவினைக் கூட்டும்!

வாதம் புரிவதற்கே வால்முளைத்த வேதம்,
சாதி சடங்கென்று சாத்திரங்கள் பேசும்.
நீதிக்குள் அடங்காத சாதிச்சண்டை சேற்றில் வாதத்தின் வலிமையினால்,வலிகளே மிஞ்சும்!. 

வேதவழி என்தை வேள்விவழி யாக்கி 
காதில்விழும் மந்திரங்கள் எல்லைக்கற்க ளாகி,
நாதியற்ற நல்லோரின் நலம்காக்கும் தூணென, சூதுமரம் சாய்த்திட,நாதன்வரும் நேரமெது?
ப.சந்திரசேகரன் .