தூரம் குறைக்குமோ நேரம் குறைக்குமோ,
ஊர்வளம் பெருக்கிடும் பசுமைச் சாலைகள்?
பேரங்கள் பேசியே,உரிமைகள் உடைத்து
ஊரையே கடத்துமோ பயணப் பாதையில்?
வேரினை மறந்த விளைநிலங்க ளோடு
நீரினைத் துறந்த ஏரிகள் தூர்த்துநாம்
ஊரினை நகரமாய் உயர்த்திடும் வண்ணம்
மார்புகள் நிமிர்ந்திட மாடிகள் படைத்தோம்!
பசுமை பகைத்து ஆற்றிய செயல்கள்
விசும்பிடும் வகையில் வீழ்ச்சி அடைந்து
பசியாய் தாகமாய் திசைகள் நான்கிலும்
நசுக்கி நம்மை தாக்கிடக் கண்டோம்!
விசைத்தறி சுற்றிடும் நூலெனச் சுழன்று
அசையாச் சொத்து ஆசையில் ஆக்கினோம்
அசலாய் வட்டியாய் அனுபவம் பெற்றபின் வசைச்சொல் வேள்வியில் யாரிங் கெதிரியோ ?
ப.சந்திரசேகரன் .
ஊர்வளம் பெருக்கிடும் பசுமைச் சாலைகள்?
பேரங்கள் பேசியே,உரிமைகள் உடைத்து
ஊரையே கடத்துமோ பயணப் பாதையில்?
வேரினை மறந்த விளைநிலங்க ளோடு
நீரினைத் துறந்த ஏரிகள் தூர்த்துநாம்
ஊரினை நகரமாய் உயர்த்திடும் வண்ணம்
மார்புகள் நிமிர்ந்திட மாடிகள் படைத்தோம்!
பசுமை பகைத்து ஆற்றிய செயல்கள்
விசும்பிடும் வகையில் வீழ்ச்சி அடைந்து
பசியாய் தாகமாய் திசைகள் நான்கிலும்
நசுக்கி நம்மை தாக்கிடக் கண்டோம்!
விசைத்தறி சுற்றிடும் நூலெனச் சுழன்று
அசையாச் சொத்து ஆசையில் ஆக்கினோம்
அசலாய் வட்டியாய் அனுபவம் பெற்றபின் வசைச்சொல் வேள்வியில் யாரிங் கெதிரியோ ?
ப.சந்திரசேகரன் .
வேரினை மறந்த விளைநிலங்க ளோடு
ReplyDeleteநீரினைத் துறந்த ஏரிகள்....makkalai marantha jana nayagam....யாரிங் கெதிரியோ ?