Wednesday, July 25, 2018

ஆடிப்பெருக்கு

வலிகளின் வரலாறு 
புரியாத புதிரே !
காயா வடுக்கள் ,
வேதனை வரலாற்றை,
நாளும் நினைவுறுத்தும் .
வரலாறு என்றுமே, 
வறண்டு போவதில்லை;
வற்றாத வரலாற்றில்,
வழியெங்கும் ஆடிப்பெருக்கே.
கற்றாழைக் கரையோரம்
காலிடரி நிற்கையிலே,
சுற்றிடும் சுழலெனவே 
சூதுகள் கவ்விட,
மதயானைப் புதைமணலில்
மடிந்திடும் மனமே !
பெருக்கெடுக்கும் வெள்ளத்தில்
வரலாறு சொல்லும்கதை,
ஆடி அடங்குகையில்
ஆடியோ ஆவணியோ,
தேடிய காயங்கள்,
தேடா வலிகளாய்,
கூடா நன்மையினை
கூடாமல் செய்திடும்.
வரலாற்று வெள்ளத்தில்
காயங்கள் பலநேரம்,
காயா முட்செடியே!
நோயினும் கொடியதிங்கே,
மாயா காயங்களே !  
ஆடிப் பெருக்கென்றும் 
கோடிட்ட வலித்தழும்பே !
 ப.சந்திரசேகரன் .      

No comments:

Post a Comment