Wednesday, July 18, 2018

தொப்புள்கொடி உறவுகள்

தொப்புள்கொடி உறவுகள் தாயறிந்த கதையே! 
தப்பாகக் கதைசொல்ல,தாயறிந்த திலையே! 
எப்பாடு பட்டேனும் கொடியுறவைக் காப்பதே,
அப்பாவின் பேர்சொல்லும் அம்மாவின் நிலையே!

வெப்ப வார்த்தைகளால்  தொப்புள்கொடி துவள ,
எப்போதும் தாய்மைக்குள் எரிந்திடும் வயிறே !
தொப்புள்கொடி உறவுகள் திக்கொன்றாய்ச் சிதற, 
நப்பாசை கொள்வோரை,நாள்காட்டும் நடப்பே !

பகையோடு பாசமும் படர்ந்திடும் பந்தலின் 
முகத்தினில் பளிச்சிடும்,முழுமதி மறைத்திடும் ,
அகத்தினில் இருளின் அரங்கேற்றம் கண்டு,  
சகிக்குமோ தாய்மை கொடியின் கொடுமை !

சகோதரிகளே ஆனாலும்  ஓரகத்திக ளென்றும் 
தகராறின் முனைப்பில் ஈரகத்துக் கணைகளே!
முகாரி ராகத்தில் முன்னொருநாள் தாய்மையும், 
நகைத்தோ நலிந்தோ ,கொடியறுத்த குலமே !


ப.சந்திரசேகரன் .  


No comments:

Post a Comment