Friday, April 6, 2018

கொள்; கொல்.


கொள்.
கொள்முதல் கொள்;
பயிரும் உயிரும்,
கொல்லாமல் கொள்;
பொல்லாத ஆசை,
கொள்ளாது கொள்;
எல்லா உயிரும்
இன்புறக் கொள்;
வல்லான் வகுத்ததே
வாழைக் குருத்தென,
கொள்ளாது, கொள்.
இல்லாமை இறுக்கி
கொல்லெனக் கொள். 
'ஒல்லும் வகையான்
அறவினை ஓவாது'
ஓயாமல் கொள்';
சொல்லில் பிறழாது,
சூழும் சூதினைக்கொல்.
எல்லா வயிறும்
பசியுரக் கொள்;
எள்ளும் கொள்ளும்
நெல்லும் போல,
எல்லாப் பயிரும்
இசைவுறப்  போற்றி,
பல்லுயிர் ஓம்பும்
பரிவுடன் கொள்;
மனசார மக்களின்
அன்பைக் கொள்;
கொள்ளைகள் கொல்;
கொள்கைகள் கொல்லாதே.
அரசெனும் பெயரால்,
அதர்மம் கொல்;
ஆளுமை கொல்லாதே.
                          ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment