Saturday, April 21, 2018

புற்றீசல் அழிப்போம்!

பொழுது விடிந்ததும் காண்பதும் கேட்பதும்,
அழுது தீர்த்திடா அவலச் செய்திகளே!
நேர்க்கோடு வரைந்தால் வளைந்து நெளிந்து,
குறுக்குச் சாலையாய் குற்றம் படைத்திடின்,
ஊர்க்கூடி நேர்பாதை அமைப்பதே நிகழ்வோ! 
மழலையின் சிரிப்பையும் மார்க்கமாய் காணும்,
கிழட்டு நரிகளின் கழுத்தை நெரிப்போம்.
கல்விச் சாலைகள் கழிசடைக் கடலாகின், 
கல்லாகி நிற்கவோ கல்வித்தாய் கலைவாணி! 
இரையாகிப் போவோரை குறைகூறி  வீழ்த்தாது,
புரையோடித் தாக்கும் புற்றீசல் அழிப்போம்!
அரசியல் பொய்யாகி,ஆன்மிகம் பொய்யாகி,
சிரசுமுதல் பாதம்வரை, சிற்றின்பம் பெரிதாகின்,
உரசிப் பார்த்திட உண்மையெங் குண்டோ?  
பரிசலாய் பாழ்கடலில் பண்புகள் மூழ்கிட, 
தரிசுகள் நீர்பெரும் நாள்நமக்கு உண்டோ? 
                                                     ப.சந்திரசேகரன் .  

2 comments:

  1. Res. Br.,
    nice..very nice..
    May HE shouldered all your
    good deeds in to the BEST..
    Brotherly yours
    n.balasubramonia pillai
    05/107

    ReplyDelete
  2. Res. Br.,
    nice..very nice..
    May HE shouldered all your
    good deeds in to the BEST..
    Brotherly yours
    n.balasubramonia pillai
    05/107

    ReplyDelete