Saturday, April 21, 2018

புற்றீசல் அழிப்போம்!

பொழுது விடிந்ததும் காண்பதும் கேட்பதும்,
அழுது தீர்த்திடா அவலச் செய்திகளே!
நேர்க்கோடு வரைந்தால் வளைந்து நெளிந்து,
குறுக்குச் சாலையாய் குற்றம் படைத்திடின்,
ஊர்க்கூடி நேர்பாதை அமைப்பதே நிகழ்வோ! 
மழலையின் சிரிப்பையும் மார்க்கமாய் காணும்,
கிழட்டு நரிகளின் கழுத்தை நெரிப்போம்.
கல்விச் சாலைகள் கழிசடைக் கடலாகின், 
கல்லாகி நிற்கவோ கல்வித்தாய் கலைவாணி! 
இரையாகிப் போவோரை குறைகூறி  வீழ்த்தாது,
புரையோடித் தாக்கும் புற்றீசல் அழிப்போம்!
அரசியல் பொய்யாகி,ஆன்மிகம் பொய்யாகி,
சிரசுமுதல் பாதம்வரை, சிற்றின்பம் பெரிதாகின்,
உரசிப் பார்த்திட உண்மையெங் குண்டோ?  
பரிசலாய் பாழ்கடலில் பண்புகள் மூழ்கிட, 
தரிசுகள் நீர்பெரும் நாள்நமக்கு உண்டோ? 
                                                     ப.சந்திரசேகரன் .  

Friday, April 20, 2018

Fringe Outfits.

Why frown upon fringes,with a foul notion?
Fringes are in fact,a fascinating promotion.
It is dressing that makes even desserts dainty;
It is frills that decorate dresses with a bounty.

Pruning is cutting down a fringe for no reason;
Any form of fringe,brings charm to the season.
We talk lowly of fringe benefits,or fringe outfits,
As if they fill up the void,with massive conflicts.

Our contempt for fringe,spares those who cringe.
The major players here,on others' fame,do hinge.
But the fringe groups know the purpose they serve;
A pat for the pride of their role,is what they deserve.

Perhaps too many fringes spoil their role on road.
Should it mean that their presence is an overload? 
                                                    P. Chandrasekaran.

Tuesday, April 17, 2018

பயணம்

                  பயணம்.
"பாத்துப்பா, பாத்து" என்பாள் தாய்; 
"டேய் நேரா பாத்துப்போ" என்பார் தந்தை. 
"எங்க போய் முட்டப்போறியோ போ " என்று கூறும்       சகோதரம். 
"எங்கேயாவது போய் முட்டினால்தான் புத்திவரும்" 
 எனும் ஏளனமே, உறவு
"ஏங்க நேரா இங்க வாங்க"என்பாள் மனையாள்
"டாட்டாப்பா" என்று வழியனுப்புவர் பிள்ளைகள் 
"டேய் இருடா நானும் கூடவரேன்"என்று  இணையும்   நட்பு. 
                                                                                            ப.சந்திரசேகரன் .  

Friday, April 13, 2018

சித்திரையில் தேரிழுத்து,





                                     


                               ஆறுக்குப் பஞ்சமில்லா அரும்பா ரதத்தில்,
                               நீருக்கு போரிடுர் நெடுநெடுங் காலமாய்!
                               மார்தட்டி பலரும் மறவரெனக் குதித்தாலும்,
                               யார்தட்டி எழுப்பிடவோ உறங்கி நடிப்போரை!
                               சீரோடு வளங்கண்ட செந்தமிழ் நாட்டில்,
                               ஏரோடும் கழனியை கூறுகட்டி மனையாக்கி, 
                               ஊரூராய் கட்டிடங்கள் உயரக் கண்டோம். 
                               வாராக் கடன்கூட வட்டியுடன் வந்துவிடும்.
                               தீராக் கடனாகி நின்றதுவே காவிரிநீர்.
                               வேரோடு சாயுதிங்கே வேளாண் கூட்டம்!
                               பாராளு மன்றத்தை  பாழாக்கி முடக்காது, 
                               பாராமல் புறக்கணித்த பாதாள நீரைநாம், 
                               கூரையின் நிழலாய் கூடிநின்று காப்போம் . 
                               தாராளக் கடல்நீரை தரமுடன் நிலைமாற்றி,  
                               ஏராள நீர்பெருவோம் எவரிடமும்கை ஏந்தாது. 
                               ஆரத் தழுவிடும் அன்போடும்,மகிழ்வோடும்,
                               சீரும் செழிப்போடும் சித்திரையில் தேரிழுத்து,,
                               சேராச் சொந்தங்களும் சேர்ப்போம் சிதறாமல்.
                                                                                              ப.சந்திரசேகரன் .  

Thursday, April 12, 2018

The Pyramid of Disposals.

                                       Hi 
                                 Dear guys!
                             Right now people                            
                           Dispose old for new.
                       The Robot is an invention
                     To dispose dry human labour.
                    Server has reduced service roles;
                  Smart phones outsmarted landlines.
                  Hospices heckle and hit the hospitals
                 As doctors dispose patients like pawns.
               Would-be brides would stay predisposed for
              Offloading the boys'parents as panic baggage.
              Homes for the aged, hail seniors,dropped out.
             Holy statues of gods are being shunted silently
            To dig fortune mines furtively,at divine corridors.
            The pages of history are shamelessly shattered by 
            Politically parodying stories built as new editions.
            Organ harvesting seems to surpass green harvests .
           Morphing and miming eliminate name and fame by,
           Dumping reality and aesthetics into the trash chutes.
          Laundering of money has become a lucrative disposal.
        Mercy killing is the modern scaffold for the terminally ill,
       Whose life keeps swaying as pendulum,stifling time's speed.
       Mortal remains turn fast into ashes,at the turn of the switch.
      Life resembles a labouring pyramid of programmed disposals.
                                                          P.Chandrasekaran.

Friday, April 6, 2018

கொள்; கொல்.


கொள்.
கொள்முதல் கொள்;
பயிரும் உயிரும்,
கொல்லாமல் கொள்;
பொல்லாத ஆசை,
கொள்ளாது கொள்;
எல்லா உயிரும்
இன்புறக் கொள்;
வல்லான் வகுத்ததே
வாழைக் குருத்தென,
கொள்ளாது, கொள்.
இல்லாமை இறுக்கி
கொல்லெனக் கொள். 
'ஒல்லும் வகையான்
அறவினை ஓவாது'
ஓயாமல் கொள்';
சொல்லில் பிறழாது,
சூழும் சூதினைக்கொல்.
எல்லா வயிறும்
பசியுரக் கொள்;
எள்ளும் கொள்ளும்
நெல்லும் போல,
எல்லாப் பயிரும்
இசைவுறப்  போற்றி,
பல்லுயிர் ஓம்பும்
பரிவுடன் கொள்;
மனசார மக்களின்
அன்பைக் கொள்;
கொள்ளைகள் கொல்;
கொள்கைகள் கொல்லாதே.
அரசெனும் பெயரால்,
அதர்மம் கொல்;
ஆளுமை கொல்லாதே.
                          ப.சந்திரசேகரன் .  

Offline Crowds

The line of ants is an antique animation ;
Crowd formation is singularly human.
Even if lines are formed,no matter what,
Intrusion is often a percolating pastime.
Rules are viewed as rude regimentation,
Roaming into the realms of personal pride.
To be on a line is to be behind someone,
Notwithstanding the queue fact, that even
The follower leads the ones, back of him.
But the grudge of a serpentine or bee line,
And the irking suspense time, to goal posts,
Would make the melee of a crowd far better.
The crowd is a this way or that way thriller;
An online wait is a drudging,point puller.
In a crowd you hit and run or run and hit,
Unlike on line, where order pins a border
Framed as margin,with people like words,
Passing on a design,deprived of freedom.
The palpitation of the heart is a byproduct
Of a sinister Online, stuffed with discipline.
The pipe dreams of the crowd may lack hope;
But the sluggish online moves are on a rope. 
The raffle of the ruckus bound,offline crowds,
Offers the delight of the dark dashing clouds.
                                         P. Chandrasekaran.

Sunday, April 1, 2018

உபதேசம்

உபதேச மில்லா தேசமிங் கில்லை ,
பரதேசம் கூட உபதேசம் உரைக்கும்;
உரசாத உண்மை  உணவாகப் பிசைந்து,
பிரசாதம் படைப்பர்,பிறர்க்கென மட்டும்.

வனவாசம் சென்ற ராமனும் அவன்தன்,
ஜானவாசம் கண்ட சீதையும் அறிவாள்,
மனமோசம் நொடியில் மதியைக் கடத்தி,
சிறைவாசம் வைத்த, சறுக்கிய  சலனம்.

சகவாசம் தோற்று சகதியில் விழுந்திடின்,
சிரம்கூசும் செயல்கள் சந்ததி பழிக்கும்.
பரிகாசம் காணும் பழிபாவ மனைத்தும்,
மண்வாசம் மாற்றி மடமைகள் சேர்க்கும்.

பரிசென பிறர்க்கு போதனை அளிப்போர்,
பரிசோ திப்பரோ பழுதடைந்த  தம்முதுகு? 
அரசனும் ஆண்டியும் அவரவர் அளிப்பரே,
உசுப்பிடும் ஒருதலை உடனுறை உபதேசம். 
                                                                                    ப.சந்திரசேகரன் .