அகம் ஊடுருவும்
ஆதிக்க ரதம்;
மனச்செவியில் மாயங்களை,
தினம்செருகும் திருகாணி;
ரகசியங்களின் வாய்க்கரிசி.
வதந்திப் பூட்டின்,
வசமான சாவிக்கொத்து.
உருவமிலா ஊர்தியிலே,
உலகோச்சும் நாரதர்.
இருப்பதை இல்லையென்றும்,
இல்லாததை உண்டென்றும்,
நம்பிக்கை பூச்சுற்றி,
நாள்தோறும் உடுக்கடிக்கும்,
குறும்புக் குடுகுடுக்கை.
நிஜத்தை நிழலாக்கி,
நிழலை நிஜமாகும்,
நித்திய நிறமாலை.
நேர்க்காணல் எனச்சொல்லி,
நபர்களைப் பதம் பார்க்கும்,
நவீனக் கூர்வாள்.
விவாத மேடைகளின்
விசித்திர விலாங்குமீன்.
செய்திகளின் செதிர்த்தேங்காய்.
அரிதாரம் கொண்டு,
அவதாரம் தோற்றுவிக்கும்
அதிரடி பிரம்மா.
ஆக்கவும், காக்கவும்,
ஆள்காட்டி அழிக்கவும்,
நாள்குறிக்கும் மும்மூர்த்தி.
ஆட்சிகளைப் புரட்டிப்போடும்,
ஆலகால மூலப்பொருள்.
ப.சந்திரசேகரன் .
ஆதிக்க ரதம்;
மனச்செவியில் மாயங்களை,
தினம்செருகும் திருகாணி;
ரகசியங்களின் வாய்க்கரிசி.
வதந்திப் பூட்டின்,
வசமான சாவிக்கொத்து.
உருவமிலா ஊர்தியிலே,
உலகோச்சும் நாரதர்.
இருப்பதை இல்லையென்றும்,
இல்லாததை உண்டென்றும்,
நம்பிக்கை பூச்சுற்றி,
நாள்தோறும் உடுக்கடிக்கும்,
குறும்புக் குடுகுடுக்கை.
நிஜத்தை நிழலாக்கி,
நிழலை நிஜமாகும்,
நித்திய நிறமாலை.
நேர்க்காணல் எனச்சொல்லி,
நபர்களைப் பதம் பார்க்கும்,
நவீனக் கூர்வாள்.
விவாத மேடைகளின்
விசித்திர விலாங்குமீன்.
செய்திகளின் செதிர்த்தேங்காய்.
அரிதாரம் கொண்டு,
அவதாரம் தோற்றுவிக்கும்
அதிரடி பிரம்மா.
ஆக்கவும், காக்கவும்,
ஆள்காட்டி அழிக்கவும்,
நாள்குறிக்கும் மும்மூர்த்தி.
ஆட்சிகளைப் புரட்டிப்போடும்,
ஆலகால மூலப்பொருள்.
ப.சந்திரசேகரன் .