Friday, December 29, 2017

புத்தாண்டு 2018

உறங்கிய  உண்மைகள் விழித்தெழும் நாளில்,
உலகே ஒளியில் உற்சாகம் காணும்.
பலநாள் கனவுகள் பலித்திடும் வேளையில்,
பாதையின் தடைகள் பழங்கதை யாகும்.
தலைகள் எண்ணிட தலைமை தோன்றுமோ?
விலைக்கு வாங்கிய வாக்குகள் வெல்லுமோ?
போலிகள் போரில் வெல்வதும் தோற்பதும்,
வாய்மையின் வேலியைத் தாண்டிய தாழ்மையே.
புதியதோர் உலகம் புதுமையில் இல்லை;
நிறம்பல காணும் மனிதர்கள் இடையே,
மறைந்த பிறையை வளர்பிறை யாக்கி,
நிறைந்திடும் நன்மையில் புதுயுகம் காண்போம்!
                      எல்லோர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 
                                                                        ப.சந்திரசேகரன் .  

1 comment: