Thursday, January 11, 2018

பொங்கல் திருநாள்




நன்மை நாடுவோர்க்கு நடத்தையில் நடிப்பில்லை; 

நாவினில் நடமாடும் வாக்கினில் பொய்யில்லை; 
செல்லாக் காசாகிலும் சிரிக்கத் தெரிந்திருப்பின், 
செல்லும் திசையெல்லாம் சந்தோஷச்  சங்கமமே  !

பொல்லாங்கு பிடித்தோரின் பல்லாக்கைத் தூக்காது, 
நல்லோரின் நட்பினை நாள்தோறும் நடப்பாக்கி,
சொல்லிலும் செயலிலும் சற்குணம் போற்றிடின்
நெல்லாகும் நாற்றென, நன்மைபல துளிர்த்திடும். 

கல்லுக்குள் ஈரமென்றும் காலத்தின் கணக்கெனின், 

வெல்லாத தீமையிங்கே, வெளியேறும் நன்னாளில்! 
வில்லின் அம்புகள்போல் வினைக்கொண்டு தாக்காது 
வல்லமையை வாழ்வுறும் அன்பாக்கி,வளம்பெறுவோம் !

எல்லோரும் கைகோர்த்து இனிமையைக் கூட்டுவோம்! 
தொல்லைகளைத் தள்ளிவைத்து திருநாள் காண்போம்! 
                                                                                      ப.சந்திரசேகரன் .  

2 comments:

  1. Good. The last four lines declare the message.

    ReplyDelete
  2. Ellorukkum Iniya Pongal nalvazthukkal....anbudan, Suriya Kumar.

    ReplyDelete