Saturday, January 27, 2018

சொல் தோழா

வார்த்தைகளுக்கு
ஏன் இப்போது, 
வால் முளைக்கிறது?
திண்ணைப்பேச்சுகள்,
நேரத்தை திண்ணதுண்டு.
இன்றைய திண்ணைகள்,
வலைகளாய்ச் சுருண்டு,
வேர்களில் வெடிக்கின்றன!
சமூக வலைத்தளங்களில்,
சாதிகளும் சாத்திரங்களும்,
சாட்சிகளாய்ப்  பிறன்று,
அன்றாட நிகழ்வுகளாய்,
அறமழித்து ஆள்கின்றன.
சொற்களில் தொக்கிநிற்கும்
சொல்லப்படாத பொருட்கள்,
வாலியின வால்களாய்,
வாயார நீள்கின்றன!
ஒருநாவின் ஒலிகள்,
ஒலிபெருக்கி நாவுகளாய்,
ஓசைகள் எழுப்புகின்றன.
பேசினால் விமர்சனம்!
 'இருந்தாலும்' விமர்சனம்.
துண்டுச் செய்திகளால்,
தோரணமாய் வேட்டிகள்!
வேட்டிகளில் விளம்பரத்தில்,
வெவ்வேறு கறைகள்.
சிண்டுமுடிக்கவும் சீறிப்பாயவும்,
செப்பிடும் வார்த்தைகள்,
மடங்களுக்கும் மேடைகளுக்கும்
மனக்களத்தில் மறுசாயம்பூசி,
மதகுகள் கடப்பாதால்
மானுடம் தழைக்குமோ தோழா! 
                              ப.சந்திரசேகரன் .  

2 comments: