Monday, March 27, 2017

மாயா !


மாயா !
கட்டிவைத்து என்னை எங்கே கூட்டிச் செல்கிறாய்
பெட்டியில் வைத்து புதைக்கவா அன்றின்
வெட்டியான் கையினில் வெறுஞ் சாம்பல் ஆக்கவா?
கட்டிளங் காளையாய் இருந்த நற்காலம் போய்
முட்டி மோதி முழங்கால் வரையேனும் புண்ணியம் சேர்த்து,
எட்டிப் பிடித்து இறைநெறி தழுவுகையில்,
வெட்டிவிடுவாயோ வீச்சறுவாள் வெறியோடு?
தட்டான் கையில்  தங்கம், கடுந்தீ கண்டதெனின்
வீட்டுவிடுவேனோ வேள்விகண்டு  பெற்ற வரம்?
                                                       ப. சந்திரசேகரன்          

Thursday, March 23, 2017

The Blinkers.


I wake up from bed with a void from within,
There is a volutile itch, steering to fill the void
With vagabond thoughts and  vanquishing facts.
The newspaper comes in handy to do that.

My prayer chart contains flowers,light and incense
And a little bit of music, that keep me hindered,
From getting closer to my divine destination,
Despite my rote chanting of hymns, half learnt,

My routine has been raided by colorful illusions,
Starting from childhood fancies and fables,
Through adulthood dreams dipped factual ambiance,
But ending as an empty container never loaded.

Ever being driven, never being let to see sideways,
My life's journey, has seen more nights than days.
                                                  P.Chandrasekaran.

Tuesday, March 14, 2017

மாயா!

மாயா!
சமரசம் உலாவும் சமாதிகள்
தியான மேடைகளாய்
சத்திய  அரங்கேற்றத்தின்
சதுரங்கக் களங்களாய் மாறிட,
உதிரம் உறைந்து உறங்கும் உயிர்கள்
கதிரினில் கரையும் பனியென உருகி,
சதையும் எலும்பும் சட்டெனக் கரைந்து,
புதிரெனும் ஆன்மா புதையிருள் கடக்குமோ
விதைகளாய் மாறி விருட்சம் பெறுமோ
பதில்சொல் மாயா பகுத்தறிவோடு.  
                                             ப. சந்திரசேகரன்.                 

Friday, March 10, 2017

கைலாயநாதனுக்கு ஒரு பிரதோஷக் கடிதம்.

கைலாயநாதனுக்கு ஒரு பிரதோஷக் கடிதம்.
========================================
எங்கே இருக்கிறாய் நீ?
ஊர்பற்றி எரிகையில்
ஒளிந்துகொண்டிருப்பதில் அர்த்தமில்லை;
தெளிந்த நின் பார்வையில், யார் இங்கே நல்லவர் என்று
புள்ளி விவரம் எடுக்கச் சொன்னேனா சொல்!
ஊரில் உன்பெயர் துதிப்போர் பலரும்
மார்பில் உன்னை மனமாரக் கொண்டவரோ?
வேர்வரை விஷங்கொண்டோர்  விறகாய் உனைக்கூட,
யாருக்கேனும் விற்றிடுவர் யாத்திரை எனும்பேரில்.
அமணன் நீயென்று ஆருடம் பேசாதே;
எமனை எப்போதும் துணைக்கு வைத்துக்கொள் .
விண்ணில் உன்னை விரட்டுவோர் எவருமிலர் ;
மண்ணில் மனதாரப் பொய்கலந்து போற்றி,
எண்ணி முடிப்பதற்குள் எடுத்தெறிவர் கடலுக்குள்.
ரகசியமாய் உயிர்போக்கும் ராட்சசர் மத்தியிலே,
உரசிடும் உண்மைகள் ஒருநொடியில் உயிர்சாயும்.
பரமனைக்கேள் ன் படைப்பினை பரிகசித்து!
பரந்தாமன் வசம்சொல்  நீ பார்த்ததும் பயந்ததும்!
நீ நெற்றிக்கண்ணை நீண்டகாலம் மூடிவைத்தும்
தீ பற்றியிங்கே எரியுதய்யா தீராக் கொடுமைகளாய்!
இனியும் நீ ஒளிந்திருக்க நியாயமுண்டோ?
வினைதீர்க்க சூலமுடன் வேலும் சேர்த்து,
விரைந்துவா வீழ்ந்திடும் நல்லோர் காக்க.
                                                      ப. சந்திரசேகரன்.            

Tuesday, March 7, 2017

வெளியில்வா.

வெளியில்வா இங்கே வீதிகளுக்கு வரம்பில்லை.
ஒளியில்லாப் பகல்போல உறவாடி என்னப்பயன்? 
நெளிவு சுளிவுகளை நீயே கற்றுக்கொள்.
உளியில்லாச் சிற்பங்கள் உலகிலுண்டோ சொல்? 
துளிர்ப்பதற்கு நீரென்றும் தேவைபோல் நமக்கு, 
வெளிச்சம் நாடுதலே வாழ்வதற்கு வரைவுகோல்.
கிளைகள் பெருகுதலே மரங்களின் மாட்சி.
தெளிவுடன் பரவிடு நடுமரமே நம்பிக்கை.

வெளியில்வா! ஒளியோடு பகலில் பரவிடு .
                                           ப. சந்திரசேகரன்.           

Sunday, March 5, 2017

The Woman Unmasked

                The Woman Unmasked
The Woman has walked out of her interior wardrobe,
With a wide vision and wisdom to perceive and probe
Her makeup manuals, which had mauled her identity,
Mounting her all the while, as a frail fancy commodity.
Obsessed with yummy comments on her pantry skills,
She forgot to see her animation being kept in silly stills.
Throwing, notions of naive womanhood in her kitchen sink,
She now reigns realms, with ritzy roles, at the roll of a wink.

When Adam did first discover, the ecstasy of love in Eve,
The might of motherhood was a bit beyond him,to believe.
The world today has traveled far from the first couple,
Marring man woman relationship with many a ripple.
A man who owns the worth of a woman,owns her pride,
Helping her in battling to bind, the ghastly gender divide.
                                                       P.Chandrasekaran.                     



Thursday, March 2, 2017

கூடுங்கள்! கூடுங்கள் !

கூடுங்கள்! கூடுங்கள் !
தொழுகையில் கூடுதல் தவம்;
தோழமையில் கூடுதல் போராட்டம்;
துணிச்சலுடன்  கூடுதல் போர்க்களம்.
தூற்றிடக் கூடுதல் எதிர்மறை;
அறிவுடன்  கூடிடின் அவைமாண்பு;
ஆனந்தக் கூடுதல்  கொண்டாட்டம் ;
வரிசையாய்க் கூடுதல் அணிவகுப்பு;
வாழ்ந்திடக்  கூடுதலே சமூகம்;
திரை மறைவில் கூடுதல் அரசியல்;
தீர்க்கமாய்க் கூடுதல் தீர்மானம்;
மனமுவந்துக் கூடுதல் திருமணம்;
மாதிரிக்குக் கூடுதல் கண்காட்சி:
களித்திடக் கூடுதல் இச்சைக்கே!
காத்திருந்து  கூடுதலே இறையாண்மை .
                                  ப. சந்திரசேகரன்.