Thursday, August 25, 2016

சொல் தோழா !

சொல் தோழா !
நம்பிக்கை என்பது ஒருவழிப் பாதையோ
அன்பைப் பகிர்வதும் அன்னம் பகிர்தலும்    
இன்பம் கூடுகையில் இனைந்து மகிழ்வதும்
துன்பப் படுகையில் தோள்கள் தேடுவதும்
நம்பிக்கை எனும் இருவழிப் பாதையே
ஒருமுனை நம்பிட  மறுமுனை கைவிட
தெருவினில் தேம்புமோ தவித்திடும் நம்பிக்கை .
நம்பிக்கை மீறலும், நான்கு வேதங்களின்
கம்பிகள் கடந்து காயங்கள் படைத்தலே.
கெடுவரோ நம்பினோர் கெடுதலால் என்றும்,
நெடுமரம் போன்று நம்பிக்கை வளர்த்து
நடுவராய் நிற்பது நெஞ்சின் இறைமையே .
                                    ப. சந்திரசேகரன் .        
     
   

Wednesday, August 17, 2016

மாயா! .

மாயா! .
ஒன்றைப் பெறுகையில் மற்றொன்று மடியுமோ?
அன்றைய நதியும் அழகுற்ற எரியும் 
இன்றய நகரங்களின் ஏட்டினில் மட்டுமே .
குன்றிய நதிகளும் குறுகிய ஏரிகளும் 
நன்றாய்க் கொழுத்த நாகரீகப் பெருக்கத்தின், 
தின்றது போகத் திகட்டிய மிச்சமே.
கொன்றதன் பாவம் தின்றிடப் போகுமெனும்,
சான்றிலாக் கூற்றில் சாகுமோ இயற்கையும் .
தென்றலைத் தாண்டி புயலொன்று பாய்ந்திட, 
வென்றிடும் இயற்கையே வினையின் பலனாம்.
நின்று கொல்லுமோ நெரித்து கொல்லுமோ, 
ஒன்றைப் பெற்றதனால் , டியுமே மற்றொன்று . 
                                         ப.சந்திரசேகரன்.       

Monday, August 15, 2016

The Hinges.

   The Hinges.
Hopes are the hinges of life,
Affording mobility
For a lift from the fall.
As access to holding hands
Of elders, for the young,
As supporting young pillars,
Backing up the old and the invalid,
Hopes as hinges become shoulders
Bearing others hands, firm,
But free from a fall of self esteem.
It is not like stickers joining
The end to end or side to side.
Removing identities of others.
It is not like partial paralysis,
Not letting one side work.
Hopes as hinges keep abreast,
Each one's position intact,
With a mutually belonging bonhomie.
Hopes never kill one for the other,
But make each one live for the other,
As hinges harboring, secured inlets.
Infusing a meaningful mobility,
With a strengthening hold, is meatier than.
Pressing as stickers and taking away,
The vital independence of the other.
                              P.Chandrasekaran.

Wednesday, August 10, 2016

சொல் தோழா.

சொல் தோழா.
மனக்கணக்கும் வாய்ப்பாட்டும் மடை திறந்து,
தினப்பயனாய் திணறலை மழுங்கச் செய்ய .
விரல்கூட்டிக் கணிதத்தில் வித்தைகள் புரிந்தோம்.
குரல்கூவிக் குதூகலமாய், எண்ணும், எண்ணமும்
தரைமுதல் வான்வரை உயரக்கண்டோம்.
புண்ணியக் கணக்கை புன்னகையால் உயர்த்தி
கண்ணியமாய் பாவங்கள் கணிசமாய்க்  கழித்தோம்.
பெருக்கிய நன்மைகளை  பிறர்க்கும் பகிர்ந்தளித்து
தெருக்கள் தோறும் நண்பர்கள் கூட்டினோம்.
என்கணக்கும் உன்கணக்கும் நம்கணக்கை நிமிர்த்த,
மின்காந்தக் கணக்குகளை மிஞ்சும் மிடுக்கோடு ,
நின்றாலும் நடந்தாலும், நிறைவுகளே நம் நெஞ்சில்!
அன்றாட  நினைவுகளில் நின்றாடும் கணக்குகள்,
வென்றாலும் தோற்றாலும் வேதனை நமக்கில்லை.
என்றும் இணைவுகளால், மகிழ்ச்சிக் கூட்டல்களே.
கன்றுகள் மரமாகும் காட்சிகள் காண்போம், வா தோழா !
                                                                        ப.சந்திரசேகரன் .    
     
       

Thursday, August 4, 2016

HURDLES.

                               Hurdles.

Difficult thoughts are difficult to express,
In easier forms of words, on the wall. 
Easier thoughts also get stuck, at times,
In eerie expressions, as visuals and sounds.
Wherever understanding undergoes ordeals ,
Everyone finds it difficult to handle the hassle.
If failed parents are the victims of difficult children,
Miserable children are the making of mindless parents.
Society is stuffed with symptoms of blocking syndromes.
When words misfire, ideas succumb to their flames.
Good deeds die a cot death, from ill conceived wombs,
As a sequel to aborted ideas and amputated words. 
Seen hurdles are easier to cross, than those unseen.
Thoughts and words plain,pass out as deeds clean.  
                                                                          P.Chandrasekaran.

Wednesday, August 3, 2016

சொல் தோழா !-- 12

சொல் தோழா !
பழமொழி என்பது புதுயுக மரத்தின்
அழிந்த பழமென விழுந்திடக் கூடுமோ ?
மொழிந்த கூற்றுகள் மொழியின் ஊற்றோ
எழுந்த கருத்தின் இறையொளி வீச்சோ?
குழந்தையின் சிரிப்பினில் குற்றம் காணலும்,
பழமொழிச் சொற்களில் பரிகாசம் போற்றலும்,
இழந்திடக் கூடா இயக்க விசையினை,
இழுத்து நிறுத்தும் இறுக்க மன்றோ !
                              ப. சந்திரசேகரன் .    


Tuesday, August 2, 2016

மாயா !. 5

மாயா.
வாதம் புரிகையில் வாய் நீளுமோ?
பேதம்  பெரிதாகிக் கை நீளுமோ?
பேதையாய்ப் பெண்மையை பழித்த காலம்போய்,
காதில் விழுஞ்சொற்கள் கதகளி காட்சிகளாய்,
மோதிப் பார்த்திட முனைந்திடும் பெண்மையில்,
வாதியோ வாய்மூடிய கைதியோ  ஆண்மை?
நீதிக்கு நெருடலாய் நிலைகள் மாறிட,
பாதிவழிப் பயணமே மீதிவழி காட்டுமோ?
சீதையின் பாதையில் சீறிடும் பாதங்கள்
சாதிப்ப திங்கே வெற்றியோ தோல்வியோ?
வேதனை வலையில் ஆண்மையோ அல்லது
தீதும் நன்றும் ஈன்றெடுக்கும் பெண்மையோ?
                                                                பசந்திரசேகரன்.