Saturday, December 30, 2023

காலத்தின் அதிகாரம்.2024

(இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்).

காலத்தின் அதிகாரம்,காட்டிடும் கடிகாரம். 

ஞாலம் முழுவதும் கோலங்கள் குறிகாட்டும். 

கால்களின் ஆற்றல் கண்டங்கள் பலகாணும். 

வேலையின் வேகத்தில் அண்டமே  அதிர்வுரும்.


மாறிய தலைமுறைக்கு மதியே மூலதனம். 

ஏறி இறங்கிடும் பொருளியல் புகைச்சலில், 

ஊறிய சேமிப்பை உறிஞ்சிடும் விலைவாசி;

மீறாக் கடமைகளில் மிரட்டிடும் அலைபேசி.


வீதிகள் விரிந்திட,வணிகத்தில் மனிதம்.  

நீதியின் நடுக்கத்தில் நடுநிலை தடுமாறும். 

சாதிமதச் சான்றுடனே சாட்சிகள் சதிராடும்; 

ஊதிப் பெருக்குதலில் ஊடகம் தடம்மாறும்.


ஆலமரம் போலடர்ந்து ஆக்கமது நிழலாகி 

கூலிக்கு மாரடிக்கா குணமது கூடமைக்க, 

வேலிக்குள் அறமென்று,வெற்றி மரம்நட்டு

பாலமது அன்பாக பாரினில் கட்டமைப்போம்.

ப.சந்திரசேகரன்.





1 comment: