(இனிய ஆயுதபுசை வாழ்த்துக்கள்.)
கலைவாணி களத்தில் தொழிலே எழில்.
படிப்பே பண்புறும் வாழ்க்கைப் பிடிப்பு.
நடிப்பிலா நடப்புகள் நாடியின் துடிப்பு.
நலமுடன் நாவினில் உதித்திடும் சொற்கள்
நன்மைகள் பயத்திட நாளும் படர்ந்திடின்,
குணமது கோவிலின் கோபுரம் ஆகும்.
வீரம் என்பது நியாயம் கோரல்.
நீதியின் நிசங்கள் செல்வமாய்ச் சேரல்.
புத்தகப் படிப்பும் வித்தகர் பிடிப்பும்,
எத்தனை கேள்விகள் எதிர்ப் பட்டாலும்
மெத்தனம் இன்றி மேற்படி ஏறி,
சத்திய வெளிச்சம் சமூகம் காணும்.
கல்வியும் செல்வமும் வீரமும் இணைந்து,
பொல்லாத் தீமைகள் பூமியில் களைந்து
பத்துநாள் பண்டிகை பரவசம் படைத்து,
அத்தினைக் கடக்கா,அறம்பல உரைக்கும்.
மூவகை திறமைகள்,மூலிகை மணமுடன்
தூவிடும் மலர்களில்,நோயெலாம் மாறும்.
ப.சந்திரசேகரன்.
....கலைவாணி களத்தில் தொழிலே எழில்.... ஆரம்பமே ச்ச்சும்மமா அதிருத்தில்ல!!🌞🌞
ReplyDelete