Monday, October 9, 2023

வழிவழியாய்.....

அணி சேர அரவணைத்தால்,

செல்லும் வழி சிறப்பாகும்.

இருப்பவனை வெட்டி விட்டால்,

இருந்த வழி இகழ்வாகும்.

படித்த வழி பயணித்தால்,

படிப்பின் தரம் பரிசாகும்.

படிக்கா வழி பாதையாகின்,

இடிக்கும் இடர் இரட்டிக்கும்.

அன்புவழி அகம் நுழைந்தால்,

முன்பே பகை புறம்காணும்.

ஆசை வழி அலைந்திட்டால்,

மோச வழி முள்ளாகும்.

கோப வழி குதிரையேற,

ஆபத்து அண்டி நிற்கும்.

வஞ்ச வழி வரைவோர்க்கு,

நஞ்சு நெஞ்தை நரியாக்கும்.

அழிக்கும் வழி அடிவைத்தால்,

பழியே படுங் குழியாகும்.

கருணை வழி கண்டிட்டால்,

காணப தெல்லாம் கடவுளாகும்.

வாழும் வழி பலாவாயினும்,

சாகும் வழி சடலத்திற்கே.

ப.சந்திரசேகரன்.


2 comments:

  1. வாழும் வழி பலாவாயினும்,
    சாகும் வழி சடலத்திற்கே பிளாட்டினம் மனமானால் , வைரமாகும்,சிந்தனைகள் 💭

    ReplyDelete
  2. நளினமான விமர்சனம் சார்.

    ReplyDelete