Thursday, April 13, 2023

திருநாள் மேடைகள்

(இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.)

அன்பைக் கூட்டி,அறிவால் வகுத்து,

பண்பைப் பெருக்கி,பகைமை கழித்தலே,

படிப்பினை மிஞ்சிய பழம்பெரும் கணக்காம்.

கிடைத்திடும் நன்மைகள்,திருநாள் மேடையாம்.


ஊரைச் சுற்றி உலாவரும் தேர்களும்,

தேரை இழுத்து திளைத்திடும் ஊர்களும்,

கூட்டம் திரட்டி குணங்களைச் சேர்க்கையில்,

ஈட்டிடும் அரியணை,சமத்துவ மேடையாம்.


சித்திரை தொடங்கி பங்குனி வரையிலும்,

சத்தியம் உரைத்திடின்,சங்கடம் சரியுமாம்.

விடியலின் ஒளியினில் காரிருள் கரைந்திட,

படிந்திடும் வெளிச்சம்,நீதியின் மேடையில்.


வருடம் பிறந்திட,விழாக்கள் விரிந்திடும்;

ஆருடம் கடந்த ஆற்றல் முனைப்பினில்

ஆட்டக் களத்தை மாற்றிடும் கொள்கைகள்.

'நாட்டு நாட்டென' நிறையுமாம் மேடைகள்.

ப.சந்திரசேகரன்.



3 comments:

  1. சிறப்பு சார்.... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி திரு.மணிகண்டன்.

    ReplyDelete
  3. ..."சித்திரை தொடங்கி பங்குனி வரையிலும், சத்தியம் உரைத்திடின்,சங்கடம் சரியுமாம்....." இதுல இருக்கு மொத்த உணர்வு பூர்வ அடர்த்தி வீச்சும். ,,....

    ReplyDelete