Tuesday, January 25, 2022

இந்தியக் குடியரசு

{இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்} 

             ஜனவரி  26, 2022

அறமே  நமக்கு பெரிசு;

அனுதினம்  நன்மையே பேசு. 

அநீதியை அறிவால் உரசு;

அடித்துக் கொட்டு முரசு.                  


மரபுகள் வரலாற்றுப் பரிசு 

மாற்றிடும் மரபுகள்  தரிசு.

மாற்றுவதில் சிலருக்கு மவுசு 

மக்கள் மன்றமே தராசு.


சகதிகள் கண்டிடக் கூசு;

சக்தியாய்த் தட்டிடு தூசு.      

சுயமரியாதைக் காற்று வீசு

சூரரைப் போற்றி பேசு.

 

இரட்டை நிலைப்பாடு கடாசு; 

இலட்சியம் சரிப்போரை விளாசு .

இதயமாம், இந்தியக்  குடியரசு. 

இமைபோல் காப்பதே தவசு. 

ப.சந்திரசேகரன்.    



No comments:

Post a Comment