Thursday, January 13, 2022

தையில் பொங்கிடும்

{இனிய தமிழ்த்திருநாள் வாழ்த்துக்கள்)

         ***************+***************

நோய் ங்கிட,நலம் பொங்கிடும்; 

வாய் ரைந்திட,புன்னகை பொங்கிடும். 

தாய் மடியினில்,தனிச்சுகம் பொங்கிடும். 

தூய்மையின் தவத்தில்,நீரும் நெருப்பும், 

வாய்மையில் கொதித்து,வரது பொங்கிடும். 

தேயா நன்மைகள் திருவிழா கணக்கே! 

ஆய கலைகள் அறுபத்து நான்கோ,

மாயத் திரையின் மாதிரி காட்சியோ! 


பாயின் பகல்சுகம்  போகியாய் எரித்து  

ஓயா உழைப்பினில் உலகம் சுழன்றிட, 

தீயதை தீயெனத் தாண்டிடும் வேளையில்,

காயும் கனியும்,கழனியில் நெல்லும், 

பேயெனப் பொழியும் மழையினைத் தாண்டி,

தையில் பொங்குமாம்,தமிழ்த்திரு நாளாய்!

 ப.சந்திரசேகரன்.    

        









No comments:

Post a Comment