குத்தகை உன் கையில்;
நித்தமும் நான் படுக்கையில்.
சத்தமமாய்க் கதறி அழ,
சக்தி இல்லை என்னிடம்.
அத்து மீறாது வாழ்ந்தாலும்,
செத்துச் சிதை எரிய,
உத்தரவு உன் பொறியே!
பித்தா,பிறைசூடி நின்றோனே,
பெத்தது பரிவுடன் பார்த்தாலும்,
எத்தனை எழாத பொழுதுகள்!
எத்தராய் பணம் செய்து
ஏறி மிதித்தோர் உயிர்
பத்தே நிமிடத்தில் பறிக்கின்றாய்!
உத்திரம் நோக்கியே உழன்று,
காத்துக் கிடக்கிறேன் கரையேற;
கொத்திக்கொள்[ல்] என்னுயிரை சட்டனவே!
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment