Wednesday, August 18, 2021

கருவறைக் குரல்

 

அண்ணாந்து பார்த்தா ஆகாயம்; 

உள்ளாழ்ந்து  பார்த்தா பாதாளம்; 

ட்கார்ந்து பேச நானிருக்கேன். 

உள்ளாற வாப்பா உணர்வோடு! 


மனசுக்குள் சுத்தம் இருந்தாக்கா, 

மத்தது எல்லாம் மதச்சாயம்.

பழங்களும் பூக்களும் பலசாதி; 

படைப்பவன் ஏனோ,ஒருசாதி? 

 

எண்சான் ஒடம்ப ளசாக்கி

நெஞ்சோடு என்ன வச்சுகிட்டா,

பஞ்சான மனசில் தேனூற, 

பருகிட வருவேன் பசியாற.


அகத்தின் சுகமே,ஆகமமாம்.

முகத்தை  முட்டும் முறிவினிலே,

புகையும் பேதம் பெரிசானா, 

யுகம்பல தோற்கும்,பாராயணம். 


என்னைக் கட்டி ஆள்வதற்கு, 

என்பலம் சொல்லி வாழ்வதற்கு, 

'மனத்துக்கண் மாசிலன்'ஆகியே, 

இனத்துக் கண்மூடி இங்கேவா!


வேதம் ஓலிச்சா அதிர்வுகள்; 

பேதம் பார்த்தா உதிர்வுகள். 

சாதி மறந்து சொன்னாக்கா, 

ஆதியும் அந்தமும் ஒண்ணாகும். 

 

உள்ளாழ்ந்து  பார்த்தா பாதாளம். 

அண்ணாந்து பார்த்தா ஆகாயம்; 

உள்ளாற வாப்பா உணர்வோடு!

ட்கார்ந்து பேச நானிருக்கேன். 

ப.சந்திரசேகரன்.   

No comments:

Post a Comment