Sunday, August 8, 2021

பரணி

உடுக்கை இழந்தவனுக்கு, 

ஒருகை குறையில்லை; 

வடித்த சிந்தனைக்கு 

வரவேற்பு இல்லையெனில், 

புரட்டாப் புத்தகமாய்

பொதிந்து பரணியில் வை! 

எழுதியதை எல்லாம் 

எடைக்குப் போடு.

பொட்டலம்  மடிக்கையில்

'பொருளறிய' பயன்படும்.  

பட்டினி பார்த்தவனுக்கு, 

பசிகண்டு பயமில்லை.

உலர்ந்த உணர்வுகளால் 

உள்ளத்தில்  கனமில்லை. 

நீ அறியப்படாவிட்டாலும், 

உன்னை நீ அறிவாய். 

வாடகை வீட்டினில்  

வாய்த்தவர்க்கே,வாயிற்படி;

வந்தேறிக்கு அல்ல!

உன்னைச்சுற்றி கரிவளி

ஊரளந்து திரண்டுவர, 

உனக்கேது  பிராணவாயு?.

கண்மூடும் கடைசியில், 

காலத்தின் பரணியில், 

நீயும் ஒரு புத்தகம்.

புரட்டாப் புதியதாக!

             ப.சந்திரசேகரன்.

No comments:

Post a Comment