நீதிக்கு நினைவிடம்.
வெற்றுக் காகிதத்தில்
வரலாறு படைத்தவர்க்கு,
பற்று கொண்டவர்கள்
பாடம்பெற நினைவிடம்.
கலைத்துறையில் கரைகண்ட
அலையெனும் கலைஞருக்கு,
கடற்கரையில் நினைவிடம்.
கழகத்தின் கரம்பற்றி
அழகுதமிழ் வேரூன்றி,
ஆளுமுறை அறிந்தவரின்
ஆற்றலுக்கு நினைவிடம்.
குரல்வளையும் குறள்வழியும்,
பரவும்நதி பாய்ந்தபடி,
விரல்நுனியில் விவரமெலாம்
விடைகளாய்க் கொண்டவர்க்கு,
தரணியெங்கும் தரம்காட்ட,
தலைநகரில் நினைவிடம்.
தமிழ்த்தாகம் அடங்காது
தமிழ்மண்ணை நேசித்து,
தடம்பதித்த தலைவனை,
தலைவணங்க நினைவிடம்.
நிகரில்லா வெற்றியினில்,
சிகரம் கண்டவர்க்கு,
யுகம்போற்ற நினைவிடம்.
சுறுசுறுப்பாய் உதயம்தரும்
சூரியனின் உறைவிடம்.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment