Wednesday, June 9, 2021

ஒன்றியத்தின் மத்தியில்

  'திருவிளையாடல்'திரைப்படத்தின் இறுதியில்,அன்னை பராசக்தியாக  கதாபாத்திரமேற்ற சாவித்திரி,  அவ்வையாகத் தோன்றிய  K.B..சுந்தராம் பாளைப் பார்த்து, 'அவ்வையே ஒன்று,இரண்டு,மூன்று என்று,ஈசனை வரிசை படுத்திப்பாடு' என்றவுடன்,தமிழ்மூதாட்டியை உணர்வு  பூர்வமாக பிரதிபலித்த K.B சுந்தராம்பாள்

"ஒன்றானவன் 

உருவில் இரண்டாமவன் 

உயர்வான செந்தமிழில் மூன்றானவன்" 

   என்று வரிசைப்படுத்தி பாடத் தொடங்குவார்.மைய்யத்தின் தத்துவமும் இதுவே!அனைத்தும் உள்ளடக்கியதுதான் மைய்யம்.மைய்யம் ஒன்றுதான் என்றாலும்,வரைவு செய்து விரிந்தால் மட்டுமே, மைய்யத் தின் உட்பொருள் விளங்கும். மைய்யம் தன்னால் விரிந்த  பிரிவுக ளுக்குள்,பாரபட்சம் பாராட் டக்கூடாது. அப்படி ஒரு தன்னிலைத் தாக்கம் ஏற்படுமாயின்,அது தனது  மைய்யத் தகுதியை இழந்துவிடுகிறது.தாயின் கருவறையில் தோன்றும் கருவைப் போல அது ஒரு புள்ளியே! அந்த புள்ளிதான் வளைந்து விரிந்து வட்டமெனும் ஒன்றியமாகிறது. 

  அவ்வாறு  வட்டம் உருவாகவில்லை என்றால் வெறும் புள்ளியினால் என்ன பயன்?புள்ளிகள் வைத்து கோலங்கள் வரைகையில், கோலங்களுக் குள் மறைவதுதானே புள்ளியின் மரபு.ஒன்றுக்கொன்று இணைவதே ஒன்றியம்; இல்லை யெனில் அது வெறுமையின் தோன்றிடம். 

  வட்டம் வீழ்ந்தால், மைய்யத்திற்கு  யத்தில் இடமில்லை.ஒன்றியம் குலைந்தால்,ஒருவருக்கும் லாபமில்லை

    அரசு இயந்திரத்தின் மைய்யப் புள்ளி,மக்கள் எனும் வட்டத்தை, கணித ரீதியாக சுற்றிவரும் வரையில் மட்டுமே,அற்தகு அர்த்தமுண்டு. இல்லை எனில் ந்த மைய்யம் ஓர் கரும்புள்ளியே! மைய்யத்தின் பார்வை பகுத் தாயும் பார்வையாக வும்,ஒருதலைப்பட்ச மற்ற பார்வையா கவும்  இருப்பதே,ஒன்றியம் என்பதன் உருவாக்கம்.அது போன்ற ஒன்றியத் தின் உதயத்தில், இயல்பாகவே உரிமை உட்பொருளாகி,நன்மை பரவலாகிறது. மாறாக,மைய்யம் ஒற்றைக் கண் ணோட்டத்தில், வட்டத்தின் சில பகுதிகளை கரிசன மாய்ப் பார்ப்பதும், இதர பகுதிகளை மாற்றான்தாய் மன நிலையில் புறக்கணிப்பதும்,கூட்டாட்சித் தத்துவத்திற்கு குழிதோண்டலே! 

   வண்டிச் சக்கரத்தின் அச்சாணி பிறழும் நிலை உருவாகிடின்,சக்கரம் முழுமையாக தடம் புரண்டு சின்னா பின்னமாகும்.சக்கரம் சுற்றாதிருப் பின் அச்சாணிக்கே அர்த்தமில்லை. எனவே அச்சாணியின் பயன்பாடு, சக்கரத்தை  சுழலவிட்டு வேடிக்கை பார்ப்பது அல்ல;சுழலச் செய்து, பயணித்து இலக்கை நெருங்குவதே யாகும். 

   ஒன்றியம் பேணலில்,ஒற்றுமை தவிர வேறு உள்ளார்ந்த நோக்கங்கள் இருப்பின்,அது மைய்யத்தின் விதிமீறலே.ஒற்றுமை வேராகி, சமத்துத்திலும்,சகோதரத்துவத் திலும்,ஆழ்ந்து அடர்ந்து மண்ணின் ஆன்மாவென பரவுதலே,ஒன்றியத் திற்கு பலம்.ஆனால்  மைய்யம், பிரிவினைவாதம்,மதம், மொழி முதன்மை,ஆகியவற்றை வேர்களின் வட்டமென விரிவுபடுத் தும் பட்சத்தில், அதுவே நஞ்சாகி,நாசத்திற்கு அறைகூவல் விடுக்கும்.

  பன்மொழி தேசத்தில்,பல மதத் தினர்,பல சமூகப்பிரிவினர் வாழும் நாட்டில்,ஒற்றை மதத்தினை, ஒற்றை மொழியினை,ஒரே ஒரு சமூகப் பிரி வினை முன்னிறுத்தி மைய்யம் சுற்றிவருகையில், ஒன்றியப்பாதை யில் மேடு பள்ளங்கள் தோன்றி, ஆளுமை ஆட்டம் காணும்.  

   அரசியல் சாசனத்தில் வலுவாக பொருத்தப்பட்டிருக்கும் 38{சமூக நிலைமை,[Status]வசதிகள்{facilities} வாய்ப்புகள்[opportunities]ஆகியவற்றில் காணப்படும் ஏற்ற தாழ்வுகளை களையுமாறு அரசை சம்மதிக்கச் செய்ல்}&39{இயற்கை வளங்களின், பொருட்களின் சமமான வழங்கீடை எதிர்நோக்குல்} பிரிவுகளை முறையாகக் கடைபிடிப்பது,ஒன்றிய அரசின் கடமையாகும்.இவை எல்லாவற்றிர்க்கும் மேலாக"விருப்பு வெறுப்பு அற்ற"எனும் உறுதி மொழிச் சொற்களை வெறும் சூழ்நிலை தொடர்புகளாக்காது,அரசியல் நெறியாக,ஆளும் கோட்பாடாக, நெஞ்சில் நிறுத்தி ஆளுமை மேற்கொண்டாலே,எந்த ஒரு அரசும் நல்லரசாகிறது.

   உபதேசங்களும்,ஆலோசனைகளும்,பிறருக்கு வழங்குவதற்கு முன்னர், கூட்டாட்சி சித்தாந்தத்தை,மக்களாட் சியின் மகத்துவத்தை,மக்களை மட்டும் மனதில் வைத்து,நாடும் ஒன்றே, நாட்டில் வாழும் மக்களெல் லாம் நம்மவரே,என்று முழு மனதோடு களத்தில் இறங்குவதே, ஒன்றியம்  காக்கும் மைய்யத்தின் மனசாட்சி யாம்! 

ஒன்றியத்து மத்தியில் உளமூன்றி நோக்கிடின்  

கன்றின் பசுவே கதை! 

                                  =================0==================


No comments:

Post a Comment