{3rd June,2021}
பிறப்பின் பெருமைதனை,
இறப்பில்லாத் தமிழுக்கு
இன்சுவை தேனாக்கி ,
அமரத்துவம் கண்டவரின்
அருமைப் புதல்வனே!
படைப்பாற்றல் பலமுடனே
படையாளும் திறனோடு,
அடித்தட்டு சமூகத்தை
பிடித்துயர்த்தி நின்றவரே,
அரசியலில் உம் ஆசான்.
அவரே உம் தந்தையுமாம்.
அவர்பாதச் சுவடுகளை
அடி அடியாய் பின்பற்றி,
அடிமைத் தனமில்லா
கடிவாளக் கணக்கோடு,
முதல்வர் பணியாற்ற
முழுமூச்சில் புறப்பட்டாய்!.
ஜூன்மூன்றின் வழிநடந்து
மே ஏழில் ஏற்றமொழி,
சான்கூட சறுக்காது,
தானகன்ற தலைமைதனில்
கூன்விழாத் தமிழகத்தை,
தூண்எனவே நிறுத்திடுவாய்!
'மகன் தந்தைக்கு ஆற்றும்'
மகத்தான 'உதவி'யெலாம்
'இவன்தந்தை என்நோற்றான்
கொல் எனும்'வள்ளுவனின்
நிகரில்லா 'சொல்'வென்று ,
திகைப்பூட்டும் மகன் ஆனாய்.
மே ஏழின் உறுதிமொழி,
ஓயாமல் உழைப்பதற்கு
தேயாத திடம் தந்து,
தாயெனக் காத்திடுமாம்,
தமிழாண்ட ஜூன்மூன்று.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment