{1st May 2021}
அகத்தின் விலாசம் முகத்தில் முட்டும்.
திகட்டா தரிசனம் தெய்வமென் றாகும்;
சிகரம் நோக்கி சிந்தைகள் குவிந்திட,
நகரும் முயற்சிகள் நாட்களை உயர்த்தும்.
உழைப்பினை உதறிடின்,உதிரம் ஊறுமோ?
தழைப்பது எல்லாம் துளிர்விடும் தரமே!.
கழித்திடு,அரித்திடும் காளான் அனைத்தும்;
வழித்தடம் கிடைத்திட,விதைத்தது விளையும்!
மகசூல் என்பது மடியினில் மலருமோ?
சுகத்தினை சுருக்கியே சுபமது பெருகும்.
திகைப்பில் ஆழ்த்தும் திறமைகள் கூட,
நகைப்பினைக் கடந்தே நாற்திசை காணும்.
உழைப்போர் இன்றி உயர்வுகள் உண்டோ?
மழையென மண்ணில் மணப்பது உயர்வாம்.
தொழிலின் எழிலது தொடர்கதை யாகிட,
விழியின் ஒளியென வரைவோம் உழைப்பை.
ப.சந்திரசேகரன் .
அருமை!! அய்யா!!
ReplyDeleteThanks Prabu.
Delete