Tuesday, April 13, 2021

சித்திரைச் சிறகுகள்

            {இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்} 

நித்தமும் நன்மையை நாடிப் பறந்து,

சித்திரை வந்தது சிறகுகள் விரித்து; 

உத்தம குணங்கள் உலகில்  நிறைந்திட,

நித்திரைக் கனவும்  நல்லதே காணும்! 


பத்திய உணவில் பதியாப் பசியென, 

சித்தம் விலகுமாம்,சிறுமைச் சிந்தனை;

இத்தரை,மாண்பினை இமயம் ஆக்கிட, 

சத்தியம் பேணலே சமூக மறையாம்.


எத்தனை சோதனை இறுக்கிடும் பொழுதும்,

நத்தையின் முத்தென ஒளிறுதல்  பண்பாம்!

புத்தியின் புகலிடம் புடமிடும் நெருப்பெனில், 

பித்தம் தெளிந்து பளிச்சிடும்  அறிவாம்! 


சித்திரைச் சிறகுகள் விரிந்திடும் வேளையில், 

முத்திரைப் பதிக்குமே முழுமதிக் காட்சிகள்.  

.சந்திரசேகரன் .   

 

  

  

No comments:

Post a Comment