வேதம் பயில்!
யாதுமே மனிதமெனும்
பாதையை வகுத்தபின்,
காதோரம் கடவுளுக்கு,
ஆதாரம் அடங்கியதோர்
அன்புக்கதை சொல்ல!
பேதம் பெரிதாக்க அல்ல.
வேதம் பயில்!
ஆதியும் அந்தமும்
ஆண்டவன் கணக்கென,
மீதியை மனதினுள்
மெய்ப்பொருளாய்த் தாங்கி
மதப்புயலை வெல்ல!
மதிப்புயர்த்த அல்ல.
வேதம் பயில்!
ஓதிடும் நான்கிலும்
நாதமாய் அதிர்வுகள்,
சோதனைக் கடந்து
சூதினை கவ்விடுமே,
மோதலின்றி மெல்ல!
ஊதி உலகாள அல்ல.
வேதம் பயில்!
விதைக்குமோர் மந்திரம்
சதையினுள் சாட்சியென
சத்தியமாய் வளர்ந்து
சான்றுகள் வழங்குமே
சிவனடிக்குச் செல்ல!
எவன் பிடியிலும் அல்ல.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment