"சிந்தனை செய் மனமே
செய்தால்,தீவினை அகன்றிடுமே"ன்னு
ஒரு அருமையான பாட்ட, நம்மள்ல பலபேர் கேட்டு ரசிச்சிருப்போம். சிந்தனையோட சிறப்புக்கெல்லாம்,சிரசே மூலதனம்.அதுனாலதான் 'எண்ஜான் ஒடம்புக்கு சிரசே பிரதானம்'னு,சொல்றோமோ என்னவோ!
எல்லாரும் சுயமா சிந்திக்கணும்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, கிரேக்க நாட்டைச் சேர்ந்த தத்துவ மேதை சாக்ரடீஸ்,விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்னு வரலாறு சொல்லுது.
மந்தையில இருக்கிற ஆடுங்க மாதிரி யாருமே சிந்திக்காமலோ, இல்ல கடிவாளத்தை கட்டிவிட்ட குதிரைங்க மாதிரி ஒரேகோணத்தில சிந்திக்கவோ,ஆரம்பிச்சோம்னா, மனுஷனுக்கும் மிருகத்துக்கும் வித்யாசமில்லன் னும்,அதுக்கு மொத மொதல்ல ஒவ்வொருத்தரும், அவங்கவங்கள ஒழுங்கா புரிஞ்சுக் கணும்னுதான் சாக்ரடீஸ் சொல்ல வந்தாரு. ஆனா அதுக்குள்ள அவுரு கதையே முடிஞ்சு போச்சு.
நாம எல்லாருமே சிந்திக்கிறோம். இங்க சிந்திக்காதவங்களே இல்ல. "போடா மரமண்டை"ன்னு நாம திட்டுற, நம்மகிட்ட அப்பப்ப திட்டு வாங்கிறவங்க கூட,ஏதாவது ஒரு கோணத்தில சிந்திச்சுக் கிட்டுத்தான் இருப்பாங்க!
எந்த கோணம்ங்கிறதுதான் முக்கியம்.அன்பா சிந்திக்கிறோமா, இல்ல ஆணவமா சிந்திக்கிறோமா, அமைதியா சிந்திக்கிறோமா, இல்ல ஆக் ரோஷமா சிந்திக்கி றோமா,ரம்யமா சிந்திக்கிறோமா, இல்ல ரவுடித் தனமா சிந்திக்கி றோமா,சுயநலமா சிந்திக்கிறோமா இல்ல சமதர்மமா சிந்திக்கிறோமா, அறிவுபூர்வமா சிந்திக்கிறோமா இல்ல ஆத்மார்த்தமா சிந்திக்கிறோமா,யதார்த்தமா சிந்திக்கிறோமா இல்ல,எடுத்தோம் கவுத்தோம்னு சிந்திக்கிறோமா,இப்பிடி பல வகையாச் சொல்லலாம்.
பொதுவா நம்ம சிந்தனையச் சுத்தி மூணு விஷயங்கள் எப்போதுமே 'ரவுண்ட்'கட்டிகிட்டே இருக்கும். அதுதான் நாம தினம் தினம் பாக்குற, கேக்குற,படிக்கிற,விஷயங்கள்.இந்த'பாக்குற,கேக்குற,படிக்கிற'ன்னு சொல்லுற மூணு விஷயத்திலேயும் சம்பந்தப் படறது,இடம்,பொருள், நபர்ங்கிற மூணு விஷயங்கள்.எந்த இடமா வேன்னா இருக்கலாம்;எந்த பொருளா வேன்னா இருக்கலாம்;எந்த நபரா வேன்னாலும் இருக்கலாம்.
ஆனா,நாம பாக்குற காட்சி ஒவ்வொண்ணும்,நாம கேக்குற சங்கதி ஒவ்வொண்ணும்,நாம சந்திக்கிற நபர் ஒவ்வொருத்தரும், நம்ம மனச சீண்டிப் பாக்கும்போது, வத்திக்குச்சி உரசுனா பத்திக்கிற தீ மாதிரி, நமக்குள்ள உதயமாகுறது தான் சிந்தனை.நமத்துப்போன தீப்பெட்டி போல நம்ம மனசு இருந்தா,அதுக்கு உரசுர வத்திக்குச்சி பொறுப் பாகாது.நம்ம மனசையும் இதமா,எப்பவும்லேசான சூடோட வச்சுக்கறது ரொம்பவே நல்லது.
படிச்சு தெரிஞ்சுக்குற விஷயம் எந்த அளவுக்கு நம்ம சிந்தனையை சீர் செய்யவோ,சிதறடிக்கவோ செய்யு தோ,அதே அளவுக்கு நாம சந்திக்கிற இடம்,பொருள்,நபர் ஆகிய மூணும் நம்ம மனசுக்குள்ள சிந்து பாடியோ, சிறகடிச்சோ,செதிர் தேங்காய் ஓடச்சோ,நம்ம சிந்தனைகளுக்கு புதுசு புதுசா பாதையமைச்சு, பாலமமைச்சு, இமயத்தின் உச்சிக்கோ, துருவங்களில் மூலைக்கோ,அல்லது,ஆழத்தின் இறுதிக்கோ,நம்ம மனச பயணம் போகவைக்கும். அணு அணுவா சிந்தனைகளை நிமிஷத் துக்கு நிமிஷம் வெடிக்கவெச்சு, அண்டம் முழுசும் அதிரவைக்கும்!
"சத்தியமா நான் சொல்லுறதெல்லாம் தத்துவம்;
தத்துவமா நான் சொல்லுறதெல்லாம் சத்தியம்"னு
ஒரு டி.எம்.எஸ் பாட்டுல வர்ற மாதிரி,ஒவ்வொருத்தரும் அவங்க சிந்தனையே உண்ம,ஒசத்தின்னு நெனைக்கிறப்போ,அவங்கவங்க மனசு,ரெக்கை கெட்டி பறக்கும்,
"தெளிவா தெரிஞ்சா சித்தாந்தம் தெரியாமப் போனா வேதாந்தம்"னு சிந்தனையப்பத்தி கவியரசு சொன்ன மாதிரி,புரியற சிந்தனை,புரியாத சிந்தனைன்னு,ரெண்டு வகையா, சொல்லலாம்.
சிலநேரம் பேச முடியாதவங்க அவங்க சிந்தனையை எழுதி காட்ட றச்ச,புரியாத மாதிரி பேசுற பலபேரு மத்தியிலே,பேசாதவங்க புரிய வைக்கிற சிந்தனை,எவ்வளவோ மேல்னு நெனைக்கத் தோணும்.
'பேசும் படம்'னு வசனமே இல்லாத பேசாத கமல் படம் ஒன்னு வந்துச்சே, அத நாம புரிஞ்சுகிட்டு எவ்வளவோ சிரிக்கலையா?நல்ல சிந்தனைனா, நச்சுனு மனசுக்குள்ள பூந்து,மனச நய்ய புடைக்கனும்; மனச எட்டு திசையி லேயும் விரிஞ்சு விசாலமா சிந்திக்கவச்சு,வானளாவ பறக்க விட்டு,மாஞ்சா தடவாத பட்டமா, சிந்தனையை ஒசத்தனும்.
கூர்மையான சிந்தனை மனச பொளக்கும்போது மனசின் கிளர்ச்சியிலே அண்டமெல்லாம் அதிரனும்!உண்மையின் உதிரமா, சிந்தனை சொட்டு சொட்டா, எல்லார் மனசிலேயும் விழுந்து,மனசு சிலிர்க் கையில,மண்ணெல்லாம் செழிக்கனும்.
தோகைவிரிச்சாடும் மயில்கள் போல,நல்லதோர் சிந்தனைகள் நலம் வாழ்த்தி,நாலு திசையிலேயும் மேடையிட்டு நர்த்தனமாட, அண்ட மெல்லாம் ச்சும்மா அதிருமில்ல! இதுதான் தெய்வ தரிசனமோ?
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment