Monday, June 1, 2020

புரளி

குப்பையை கிளறினால், 
கும்மென்று பரவும்.
செவிகளில் செதிர்க்காயென, 
சிதரித் தெறிக்கும்.
கும்பலில்  குதித்து , 
கொரோனா ஆகும்.
வார்த்தைகளில் வளரும்,
ஒலியும் ஒளியும்; 
அரளி விதையை, 
கலக்கிக் குடித்ததற்கு,
குலத்தைப் பழிக்கும், 
கதைகள் பிறக்கும்.
விவரப் புள்ளிகள்,    
விவேகக் பட்டியலிடும். 
சாதகங்கள் சாதனைகளாகும்;
சாதனைகள் சவக்குழிகாணும்.
பிடித்தால் பிள்ளையார்;
பிடிக்காவிடில் பிசாசு.
காய்வைத்து களிப்போர்க்கு,
நோய்நகர்த்தும் காயாகும்.
அள்ளி முடித்து 
அரசியல் செய்வோர்க்கு,
அளவில்லா  நொறுக்குத்தீனி.
பள்ளியறை பாடமென, 
பதமாகத் தலையணையில்,
பகுத்தாயும் மந்திரம்!
போட்டுக் கொடுக்கவும், 
கேட்டதைப் பெறவும்,
கேளிக்கை வரியில்லா,
உலுக்கும் உரியாட்டம்.   
காற்றில்வரும் செய்தியென,
சாதிமத பேதங்கள், 
சாத்திரங்கள் ஏதுமின்றி, 
பார்போற்றும் ஒரேமொழி, 
பகடைவழிப் புரளியாம் !
ப.சந்திரசேகரன் . 

2 comments:

  1. அது என்ன ஸார் புது பத பிரயோகம்... பகடை வழி புரளி? சூது விளையாட்டில் பயன் படுத்தப் படும் பகடையா? நேரம் அமயியும் போது தெரிவியுங்கள. நன்றி

    ReplyDelete
    Replies
    1. பகடையின் மறுபக்கமாகத் திகழும் சீட்டாட்டத்திலும் இதர சூதாட்டங்களிலும் வம்பு வதந்தி புரளி பகிரப்படுவதை நாம் எத்தனை திரைப்படக் காட்சிகளாகப் பார்த்திருக்கிறோம் [குறிப்பாக கிராமக் கதைகளை உள்ளடக்கிய திரைப்படங்களில்

      Delete