Monday, September 23, 2019

அரவணைப்பு

அப்பா அம்மா 
அரவணைப்பு,
ஐந்தில் ஒன்றாய்,
அறிந்தது குறைவே;
ஆனதும்,மிகுதியே! 
பாட்டி தாத்தா 
அரவணைப்பு,
ஏட்டில் படித்தேன்;
கேட்டு அறிந்தேன்.
ஆனதும்,மகிழ்ந்தேன் .
அன்றைய நாளில்
கூடிய உறவில்,
கூட்டத்தில் நானொரு
குறுகிய புள்ளியே!
அரவணைப் பென்றும்,
அறிந்து அணைப்பதே!
எண்ணங்கள் தழுவிடும்
அரவணைப் பெல்லாம்,
வண்ணங்கள் சேர்க்கும்,
வளம்நிறை வாழ்வில்!
தாவிடும் குழந்தையை
தழுவிடும் தாய்மையாய்,
தேவையை அறிந்து
மேவிடும் நன்மைகள்,
நாவினில் தேனென,
பூவினில் பனியென,
நீவிடத் தழுவுமாம்,
நோவுறும் நெஞ்சினை.
பாவங்கள் படர்ந்திடின்,
பாழ்மனம் தவிக்குமாம்!
புண்ணியம் தழுவிட,
பூமியே  தழைக்குமாம்! 
அரவணைப் பென்று 
இறுக்கமாய் அணைப்பது, 
நெருக்கத் தழுவலோ? 
எறும்பினை ஈர்க்கும் 
எண்ணைக் குளியலோ? 
அன்பால் அணைத்திட, 
ஆழ்ந்திடும் நெருக்கம், 
ஆழ்ந்து அணைத்திடின், 
அணைப்பே அழிக்கும்  .
                   ப.சந்திரசேகரன். 

1 comment:

  1. .............பாவங்கள் படர்ந்திடின்,
    பாழ்மனம் தவிக்குமாம்!
    புண்ணியம் தழுவிட,
    பூமியே தழைக்குமாம்! ---------------
    ------------------------------அருமை ஸார்

    ReplyDelete