பூவுடன் சேர்ந்திடும் நார் மணந்தாலும்,
கருவாட்டுக் கூடையில் பூமணப்ப தில்லை;
நாவினில் உதித்திடும் நற்சொற்கள் கூட,
தெருக்கூடிய சண்டையில் தந்திடும் தொல்லை.
கூவிடும் குயிலுடன் குதிரையும் கனைக்கையில்,
யாருடன் இணையுமோ இசையணியும் வில்லை. தாவிடும் குரங்கென தாழ்ந்திடும் அரசியல்,
தேர்தலின் பாதையில் மாற்றிடும் எல்லை.
தூவிடும் மழைத்துளி விழுந்திடும் மண்ணில்,
மார்பினில் சிலிர்ப்பென மறுகுதல் தென்படும்.
பாவியின் கரங்களை புண்ணியம் பற்றிட,
பரந்ததோர் பாவமும் புண்ணிய மணம்பெறும்.
சேவலின் கூவலில் விடிந்திடும் காலைகள்,
சேர்த்திடும் நன்மைகள் தீதினைத் தள்ளியே!
மேவிடும் மாண்புகள் மேன்மக்கள் சேர்க்கையே.
பாரினில் நன்மைகள் படிவதும் இயற்கையே.
ப.சந்திரசேகரன் .