புதுமைக்கு கொடிபிடிப்பதால்
பழமைக்கு பதட்டமில்லை.
பழமையின் விளைநிலமே,
புதுமையின் விளைச்சலாம்.
வேரின்றி செடிகள்
வெளியுலகம் காண்பதில்லை.
வெளியுலகில் காண்பதற்கு,
வேடிக்கை மட்டுமல்ல.
வாடிக்கை நிகழ்வுகளும்
தேடிப்பெறும் கனவுகளும்
கோடிச்சுகம் ஈட்டித்தரும்.
வேதனையும் சோதனையும்
வாடிக்கை ஆனாலும்,
ஆடிக் களிப்பதற்கு
ஆழ்மனமே மூலதனம்.
வாழ்க்கையின் கடிவாளம்
காலமது கைப்பற்ற,
காலத்தின் கடிவாளம்
காட்சிகளாய் நம்கண்ணில்.
வாழும்நாள் ஒவ்வொன்றும்
வாழும்வரை நம்வசமே.
ஆலமர நிழல்போன்று
அடர்ந்திடும் அன்புடனே,
அரவணைத்து வாழ்ந்திடுவோம்.
புத்தாண்டுப் பரவசத்தை
பகிர்ந்தளித்து மகிழ்ந்திடுவோம்!.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ப.சந்திரசேகரன்
Good
ReplyDeleteadvance happy new year sir
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! அய்யா!!
ReplyDeletehappy new year
ReplyDeleteவாழும் நாள் ஒவ்வொன்றும்
ReplyDeleteவாழும்வரை நம்வசமே.....
அருமை